நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார் ரோடு கீடு பண்ணித்தாங்க.. " ரோடு பண்ணலாம்.. கீடு பண்ண முடியாதே.. கலகலத்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் அருந்ததியினர் வசிக்கும் குடியிருப்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பதில் அளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் சென்றுள்ளார். அங்கு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள அவர் தான் தங்கியுள்ள விடுதிக்கு அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்திற்கு சென்றார்.

அங்கு உள்ள அருந்ததியினர் குடியிருப்புக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர்களது தேவைகளை கேட்டறிந்தார். அங்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

ஸ்டாலின் திடீர் விசிட்.. நெகிழ்ந்த அருந்ததியர்கள் - ”சேர்ல உக்காருங்க தம்பி” பாசமாக சொன்ன முதல்வர்ஸ்டாலின் திடீர் விசிட்.. நெகிழ்ந்த அருந்ததியர்கள் - ”சேர்ல உக்காருங்க தம்பி” பாசமாக சொன்ன முதல்வர்

வேலை கேட்ட மருத்துவர்

வேலை கேட்ட மருத்துவர்

அப்போது ஹோமியோபதி மருத்துவர் ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு நாற்காலியில் அமர்ந்தார். அங்கு நின்று கொண்டிருந்த ஜெயப்பிரகாஷை உட்காருங்கள என்றார். அவர் பரவாயில்லை சார் என சொல்ல, உட்காருப்பா என உரிமையுடன் கூறி அவரை உட்கார வைத்தார்.

2020 ஆம் ஆண்டு முடித்த மருத்துவர்

2020 ஆம் ஆண்டு முடித்த மருத்துவர்

பின்னர் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு ஹோமியோபதி டாக்டர் என்றார். எந்த ஆண்டு முடித்தீர்கள் என கேட்டதற்கு 2020 ஆம் ஆண்டு முடித்தேன் என்றார். தற்போது என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு வீட்டிற்கு வருவோருக்கு மருத்துவம் பார்த்து வருகிறேன் என்றார்.

நேரில் வாருங்கள்

நேரில் வாருங்கள்

உடனே முதல்வர் வேறு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். அப்போது ஜெயபிரகாஷ் தயங்கினார். உடனே முதல்வர் தயங்காமல் கேளுங்க என்றார். அப்போது ஜெயபிரகாஷ் எனக்கு ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் சார் என்றார். உடனிருந்த பெண் அதிகாரியிடம் இவருக்கு தேவையானதை செய்து கொடுங்கள் என்றார். உடனே அந்த பெண் அதிகாரியும் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வாருங்கள் என்றார். இதனிடையே முதல்வருக்கு அந்த வீட்டில் தண்ணீர் கொடுத்து உபசரிக்கப்பட்டது. பின்னர் அந்த வீட்டிலிருந்த பெண் எதையோ முதல்வர் செய்ய ஓடினார். என்னம்மா என கேட்டதற்கு டீ போடுறேன் சார் என்றார். அதற்கு முதல்வர் சரி அரை கப் போதும்மா என்றார். டீ குடித்துவிட்டு டீ நல்லா இருந்ததும்மா என பாராட்டிவிட்டு கிளம்பினார்.

கோவை மருத்துவக் கல்லூரி

கோவை மருத்துவக் கல்லூரி

இதையடுத்து கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் செல்வன் கவின் என்ற மாணவனுடனும், புதுக்கோட்டையில் மருத்துவம் படித்து வரும் செல்வி தாரணி என்ற மாணவியுடனும் உரையாடினார். வேறு ஏதாவது செய்யணுமா என முதல்வர், கவினிடம் கேட்டார். அதற்கு அந்த மாணவர், உயர்கல்வி படிக்க வேண்டும் சார் என்றார்.

Recommended Video

    முதல்வர் MK Stalin கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் *Live
    ரோடு பண்ணலாம்

    ரோடு பண்ணலாம்


    பிஜி பண்ண போறீங்களா, பண்ணும் போது சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறேன் என்றார். செல்வதாரணியிடம் நீயும் நல்லா படிம்மா என்றார். அப்போது அவர்களது தந்தை ஏதோ சொல்ல வந்தார். சொல்லுங்கள் என்ன வேண்டும் என்றார் முதல்வர். "சார் ரோடு, கீடு ஏதாவது பண்ணி கொடுத்தா நல்லாயிருக்கும்" என்றார். அதற்கு முதல்வர் ரோடு பண்ணிடலாம், கீடு எல்லாம் பண்ண முடியாதே என கலகலப்பான பதிலை முதல்வர் சிரித்து கொண்டே அளித்தார்.

    English summary
    CM Stalin jovially speaks with Arunthathiyar community people in Namakkal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X