நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் தினசரியும் 68ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை... 6 ஆயிரம் பேர் பாதிப்பு - முதல்வர்

கொரோனா தொற்றால் உலகளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

நாமக்கல்: தமிழ்நாட்டில் தினமும் 68,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனை காரணமாக, கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய நாமக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.137.65 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.14.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 26 புதிய திட்டங்களை முதல்வர் தொடக்கி வைத்தார். 19,132 பேருக்கான ரூ.91.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    Corona can be controlled with the cooperation of the public - TamilNadu Chief Minister

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் பழனிச்சாமி. ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்வதாக கூறினார்.

    நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாமக்கலில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. திருச்செங்கோடு-ராசிபுரம் சாலை விர்வாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் சேந்தமங்கலத்தில் கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியில் 1,052 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

    கொரோனா தொற்றால் உலகளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தினமும் 68,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்படுவதாக ரிசல்ட் வெளியாகி வருகிறது.

    கொரோனா தடுப்பூசி.. முதல் ஆர்டராக 50 லட்சம் டோஸ்கள் வாங்க மத்திய அரசு சூப்பர் திட்டம்கொரோனா தடுப்பூசி.. முதல் ஆர்டராக 50 லட்சம் டோஸ்கள் வாங்க மத்திய அரசு சூப்பர் திட்டம்

    காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அதிக பரிசோதனை மேற்கொள்வதன் காரணமாக, கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chief Minister Edappadi Palanichamy has said that the Tamil Nadu government is doing a good job of controlling the corona epidemic. Corona infection has affected the livelihoods of people worldwide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X