நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் பதுங்கி பயணம்.. நாமக்கல்லில் 24 பேர் மீட்பு

Google Oneindia Tamil News

நாமக்கல்: லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் சட்டவிரோதமாக பதுங்கி பயணம் செய்த 24 பிற மாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி வரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும்.

    Coronavirus lockdown: TN Police rescue migrant workers

    இதனால் பிற மாநிலங்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள் பெரும் துயரங்களுக்குள்ளாகி இருக்கின்றனர். தங்குவதற்கு இடம் இல்லாமல், வருவாய் கிடைக்காமல் அவதிப்படுவதற்கு பதிலாக சொந்த ஊருக்கே செல்வது என பிற மாநில தொழிலாளர்கள் முடிவெடுக்கின்றனர்.

    எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவாக இருந்தாலும் நடந்தே கூட பயணிக்கிற பிற மாநில தொழிலாளர்களின் நெடும் பயணங்கள் நெஞ்சை நொறுக்குகின்றன. இந்த வகையில் தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னர் லாரி மூலம் சட்டவிரோதமாக 24 பிற மாநில தொழிலாளர்கள் பயணித்தனர்.

    கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட கேரளாவின் காசர்கோடு- இந்தியாவுக்கே வழிகாட்டிகொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட கேரளாவின் காசர்கோடு- இந்தியாவுக்கே வழிகாட்டி

    இவர்களை நாமக்கல் போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்னர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தங்கும் இடமும் உணவும் ஏற்பாடு செய்யப்ப்ட்டது.

    300 கி.மீ. நடைபயணம்

    இதேபோல் கேரளாவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி 300 கி.மீ. தொலைவு நடந்தே பயணித்த இளைஞரை குமாரபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த இளைஞருக்கு உணவு வழங்கிய போலீசார் சரக்கு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்தனர்.

    English summary
    TamilNadu Police had rescued 24 Migrant workers in Namakkal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X