நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ 338 கோடியில் நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ 338.76 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Recommended Video

    எடப்பாடி சட்டமன்ற தொகுதி பகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

    Edappadi Palanisamy laid foundation stone for Namakkal Medical college

    ரூ 338.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் ரூ 1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ 34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசுக் கட்டடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ 134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.

    இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் அஸ்வின் குமார், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் மூலிகைச் செடி வகைகள், சித்த மருத்துவம், குடும்ப நலம், நோய் தடுப்பு மருந்து துறை, சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    English summary
    CM Edappadi Palanisamy laid foundation stone for Namakkal Medical college.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X