நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

32 பக்தர்கள்.. கோவிலிலேயே முகாமிட்டு செய்த 1 லட்சத்து 8 வடைகள்.. நாமக்கலில் கோலாகலம்

ஒரு லட்சத்து 8 வடை மாலையுடன் காட்சி தருகிறார் நாமக்கல் ஹனுமன்

Google Oneindia Tamil News

நாமக்கல்: ஒன்னு, ரெண்டு இல்லை... 1 லட்சத்து 8 வடைகளை சுமந்து கொண்டு நிற்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

இன்று அனுமன் ஜெயந்தி ஆகும். நாடு முழுவதும் பக்தர்கள் இதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் நாமமக்கல்லில் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.

இதற்கு காரணம், இங்குள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைதான். இந்த சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டதால், இதனை பார்க்கவே ஆஞ்சநேய பக்தர்கள் எப்பவுமே திரண்டு வருவார்கள்.

சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள்

இன்று அனுமன் ஜெயந்தி என்பதால் கூட்டம் முனுகூட்டியே கூடிவிட்டது. பூஜைகளும், அபிஷேகங்களும் காலையில் 5 மணிக்கே நடைபெற துவங்கிவிட்டன.

பிரசாதம்

பிரசாதம்

இதன் பிறகு பிரமாண்ட அனுமனுக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது. அனுமனின் முகம், மார்பு பகுதிகள் தவிர அனுமனை மொத்தமாக வடைமாலை சூழ்ந்து நிறைந்து கிடக்கிறது. ஆஞ்சநேயருக்கு மாலையாக சார்த்தப்பட்ட இந்த வடைமாலைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

32 பக்தர்கள்

32 பக்தர்கள்

கொஞ்ச நாளைக்கு முன்பே இந்த வடைகளை தயார் செய்யும் வேலை நடக்க ஆரம்பித்துவிட்டதாம். இதற்காக 32 பக்தர்கள் மண்டபதிலேயே தங்கியும் இருந்து இந்த வடைகளை தயார் பண்ணினதாக சொல்கிறார்கள்.

நாமக்கல்

நாமக்கல்

இப்போது பிரமாண்டமான வடை மாலையை தாங்கி கொண்டிருக்கும் ஆஞ்சிநேயரை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

English summary
Hanuman Jayanthi Celebration Today. Namakkal Aanjaneyar blessing with 100008 vadai malai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X