நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. "குடல் உருவி" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு!

Google Oneindia Tamil News

நாமக்கல்: திருச்செங்கோட்டில் குடல் உருவி நாகராஜன் என்ற வித்தியாசமான பெயரை கொண்ட ஹோட்டல் ஒன்று இயங்கி வருவது வைரலாகி வருகிறது. இந்த குடல் உருவி நாகராஜன் ஹோட்டலில் ஆட்டுக் குடலை உருவி செய்யும் உணவு வகைகள் மிகவும் பிரபலம் என்கிறார்கள்.

Recommended Video

    திருச்செங்கோட்டில் ஃபேமஸ் ஆகும் குடல் உருவி நாகராஜன் ஹோட்டல் - வீடியோ

    எப்போதும் ஒரு வியாபாரம் வெற்றி அடைய வேண்டும் என்றால் ஒன்று நாம் செய்யும் வியாபாரம் வித்தியாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெயராவது வித்தியாசமாக இருக்க வேண்டும். அந்த வகையில் பெயர் வித்தியாசத்திற்காகவே பிரபலமாகும் நிறுவனங்கள், வணிகங்கள் மிகவும் ஃபேமஸ்.

    அது போன்ற ஒரு வித்தியாசமான பெயரை கொண்ட ஹோட்டல் குறித்துதான் நாம் பார்க்க போகிறோம். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஆனங்கூர் சாலையில் உள்ளது குடல் உருவி நாகராஜன் ஹோட்டல். பெயரை கேட்டவுடனே அதென்ன குடல் உருவி என நினைக்க தோன்றுகிறது.

    இட்லி வேணுமா.. இடியாப்பம் வேணுமா.. இலவசமாக எடுத்துட்டு போங்க.. பட்டுக்கோட்டை ஹோட்டல் ஓனர் தாராளம் இட்லி வேணுமா.. இடியாப்பம் வேணுமா.. இலவசமாக எடுத்துட்டு போங்க.. பட்டுக்கோட்டை ஹோட்டல் ஓனர் தாராளம்

    தர்மராஜன்

    தர்மராஜன்

    இதுகுறித்து அந்த ஹோட்டல் உரிமையாளர் தர்மராஜன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், இந்த ஹோட்டலை நான் இரண்டாவது தலைமுறையாக நடத்தி வருகிறேன். முதலில் அப்பா இந்த ஹோட்டலை நடத்தி வந்தார். அவர் பெயர் நாகராஜன். நான் வெளியிடங்களில் வேலை பார்த்து வந்தேன்.

    ஹோட்டல்

    ஹோட்டல்

    பின்னர் அப்பாவின் ஹோட்டலையே பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அப்பாவுடன் வந்துவிட்டேன். அப்பாவுக்கு பிறகு தற்போது இந்த ஹோட்டலை நானும் எனது அம்மாவும் பார்த்துக் கொண்டு வருகிறோம். எனக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. எனது மனைவியும் என்னுடன் உதவியாக இருந்து வருகிறார்.

    குடலை உருவிடுவேன்

    குடலை உருவிடுவேன்

    எனது தாத்தா யாருடனாவது சண்டையிட்டால் குடலை உருவிடுவேன் என மிரட்டுவார். அது நாளடைவில் அவரை கண்டால் குடல் உருவி என கிராம மக்கள் அழைக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால் தாத்தாவின் பட்டப்பெயருடன் அப்பாவின் பெயரையும் சேர்த்து குடல் உருவி என பெயர் வைத்து ஹோட்டலை நடத்தி வருகிறோம்.

    பரோட்டா

    பரோட்டா

    குடல் கறி, மட்டன் சாப்ஸ், பரோட்டா, தோசை, இட்லி ஆகியவை எங்கள் ஹோட்டலில் பிரபலம். இதற்காக வெளியே இருந்து மசாலாவை வாங்காமல் என் அம்மாவே தயார் செய்கிறார். வீட்டில் எப்படி சுத்தமாக சமைக்கிறோமோ அது போல்தான் இங்கும் சமைக்கிறோம். 48 ஆவது ஆண்டாக இந்த ஹோட்டலை நடத்தி வருகிறோம்.

    பார்சல்

    பார்சல்

    கொரோனா காலம் என்பதால் நிறைய பேர் பார்சல் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். பிசினஸ் தற்போது டல்லாகத்தான் இருக்கிறது. காலை டிபன், மதியம் சாப்பாடு கிடையாது, அத்துடன் பிற்பகல் 3 மணிக்கு சிக்கன் பகோடா போடுவோம். இரவு நேரத்தில் டிபன் செய்வோம். பரோட்டாவுக்கும், தோசைக்கும் மட்டும் மாஸ்டரை வைத்துள்ளோம். மீதியை என் அம்மாவே பார்த்துக் கொள்வார்.

    ஆட்டுக் கறி

    ஆட்டுக் கறி

    காலையில் 5.30 மணிக்கு ஆடு, கோழி கறியை வாங்கிக் கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் டிபன் தயாராகிவிடும். 5 இட்லி, ஒரு குடல் கறி ரூ 130க்கு விற்கிறோம். மேலும் ரூ 20-க்கு ஆம்லெட் தருவோம். சைவம் சாப்பிடுவோருக்கு சைவ குருமா இருக்கிறது. வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் செய்தால் வடை, சாம்பார் உள்ளிட்டவைகளுடன் உணவை தயார் செய்து தருகிறோம் என்றார் தர்மராஜன்.

    English summary
    Kudal Uruvi Nagarajan Hotel in Tiruchengode is going viral in Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X