நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரத பிரதமர் அப்துல் கலாம்.. இல்லை இல்லை பாரத பிரதமர் மோடி.. கன்பியூஸ் ஆன அமைச்சர் சரோஜா!

Google Oneindia Tamil News

நாமக்கல்: பிரதமர் பெயரை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் பம்பரம் சுழன்று தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வேட்பாளர்களின் பெயரை மாற்றிக் கூறுவது, கட்சியின் சின்னத்தை மாற்றிக் கூறுவது என பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது திமுகவை காட்டிலும் அதிமுக கூட்டணியினரே உளறலில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக உளறும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பட்டியலில் தற்போது அமைச்சர் சரோஜாவும் இடம்பிடித்துவிட்டார்.

வாக்கு சேகரித்தார்

வாக்கு சேகரித்தார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. அதில் சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து காக்காவேரி பகுதியில் வாக்கு சேகரித்தார் சரோஜா.

குக்கர் சின்னத்தை வாங்கியிருப்பது நாங்கள்தான்- அமைச்சர் மணிகண்டன் பரபரப்பு தகவல் குக்கர் சின்னத்தை வாங்கியிருப்பது நாங்கள்தான்- அமைச்சர் மணிகண்டன் பரபரப்பு தகவல்

சிரிப்பலை

சிரிப்பலை

அப்போது அவர் பாரத பிரதமர் அப்துல் எனக் கூறி பின்னர் சுதாரித்துக் கொண்டு பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என தெரிவித்துவிட்டார். இதனால் அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது.

நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

முதல்வர் சொதப்பல்

முதல்வர் சொதப்பல்

தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத்தை ஆதரித்து அலங்காநல்லூர் பகுதியில் நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் பழனிச்சாமி, தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்பதற்கு பதிலக ஓ.பி.ரவிச்சந்திரகுமார் என மாற்றி கூறினார். உடனே அருகிலிருந்த அமைச்சர் உதயகுமார் சரிப்படுத்திய பின்னர் முதல்வர் சரியாக சொன்னார்.

சின்னம் மாற்றம்

சின்னம் மாற்றம்

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது மாம்பழச் சின்னத்துக்கு வாக்கு அளிப்பதற்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

English summary
Minister Saroja says PM name as Abdul Kalam instead of PM Narendra Modi in Namakkal election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X