நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பன்ச்" வச்சு பேசிய சரோஜா.. திணறிபோன மக்கள்.. "சொல்லாததையும் செய்வேன்".. அமைச்சரின் திடீர் அதிரடி!

ராசிபுரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சரோஜா

Google Oneindia Tamil News

நாமக்கல்: "நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்... முடியாததை முடியும்னு சொல்ல மாட்டேன்.. ஏன்னா, முடியாதது என்று எதுவுமே இல்லை.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" அமைச்சர் சரோஜா பேசிய பஞ்ச் வசனங்களை கேட்டு ராசிபுரம் மக்கள் திக்குமுக்காடிப் போய்விட்டனர்.

Recommended Video

    Saroja அதிரடி! ரஜினியின் Punch Dialogue-ஐ பேசி அசத்தல் | Oneindia Tamil

    அமைச்சர் சரோஜா ஒரு டாக்டர் ஆவார்... அரசு ஆஸ்பத்திரியில் 22 வருடங்கள் மகப்பேறு டாக்டராக பணிபுரிந்தவர்.. தான் அமைச்சரான பிறகு தன்னுடைய தொகுதியின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டி வருபவர்.

    சமீபத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில்கூட இவரது செயல்பாடு அசத்தலாக இருந்தது.. அதாவது தன்னுடைய காரிலேயே வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தார்.

    வருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..வருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்.."இந்த" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி

    கார்

    கார்

    இவர் கார் டிரைவருக்கும் பின் சீட்டுக்கும் நடுவில் ஒரு கனமான கவர் வைத்து தடுப்பு அமைத்துவிட்டார்.. முன்னாடி சீட்டில் இருப்பவர்கள் பின்சீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பில் இல்லாதவாறு கவனமாக பார்த்து கொண்டார். அதிலும் முன் சீட்டையே ரெண்டாக பிரித்து ஒரு கவர், பின் சீட்டையும் ரெண்டாக பிரித்து ஒரு கவர் என நாலு தடுப்புகளாக சீட்டுக்களை பிரித்து தொங்கவிட்டார்.. முக்கியமாக, தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காரில் ஏசியே போடமாட்டார்.

     திடீர் ஆய்வு

    திடீர் ஆய்வு

    இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அசத்தும் சரோஜா இன்றும் ஒரு காரியத்தை செய்துள்ளார்.. இவர் திடீரென நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.. அங்கு பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு வீடு தேடி சென்று பட்டா வழங்குவது பற்றியும் அவர்களின் குடும்பம், ஏழ்மை நிலை குறித்தும் ஆய்வு செய்தார்... பிறகு. பட்டா இல்லாமல் வசிக்கும் 70 குடும்பத்தினருக்கு நிரந்தர பட்டா வழங்கவும் அதிரடியாக ஆணையிட்டார்.

     ஹைலைட்

    ஹைலைட்

    அதற்கு பிறகு அந்த கிராம மக்களிடம் அமைச்சர் சரோஜா பேசியதுதான் ஹைலைட்... "நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்... முடியாததை முடியும்னு சொல்ல மாட்டேன்.. முடியாதது எதுவுமே இல்லை.. அதனால்தான் எல்லா அதிகாரிகளும் இங்கே வந்திருக்காங்க.. உங்களுக்கு தேவையானதை செய்வாங்க.. நீங்க அம்மாவுக்கும், முதல்வருக்கும் நன்றி உள்ளவர்களா இருக்கணும்.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்றார்.

    உறுதி

    உறுதி

    இதற்கு பிறகு, 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு அட்மிஷன் பெற்ற நாமகிரிப்பேட்டை சேர்ந்த தொழிலாளி தனது மகள் மாணவி மல்லிகேஸ்வரிக்கு சீட் கிடைத்ததற்கு அமைச்சரை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தார்.. பின்னர், அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்கும் 5 ஆண்டு முழுவதும் புத்தக செலவைத் தானே இலவசமாக வழங்குகிறேன் என்று சரோஜா உறுதியளித்தார். இப்படி ஒரே நாளில் ராசிபுரம் மக்கள் அமைச்சரின் வருகை, அறிவிப்பினால் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

    English summary
    Minister Sarojas Sudden Inspection in Rasipuram and speak Rajini Dialogue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X