நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Hassan Boycott:இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது

    நாமக்கல்: கமலுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடைத்தேர்தலைக் கண்டு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். இரண்டு தொகுதிகளிலும் தலா முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி எனக் கூறினார்.

    minister thangamani says kamal and dinakaran afraid of byelection

    அதிமுகவை பொறுத்தவரை எந்த தேர்தலை கண்டும் அஞ்சாது என்றும், கமலுக்கும், தினகரனுக்கும் தான் இப்போது பயம் ஏற்பட்டிருக்கிறது என விமர்சித்தார். மேலும், அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற வைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    என்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்என்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்

    இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள தினகரன், ஒரு காலத்தில் அதிமுகவில் இடைத்தேர்தல் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்பட்டார். அதற்கு உதாரணமாக சாத்தான்குளம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களை கூறலாம். அந்தளவுக்கு வியூகங்களை வகுத்து நிர்வாகிகளை வேலை வாங்கினார். திருமங்கலம் பார்முலாவுக்கு முன்னோடியாக சாத்தான்குளம் பார்முலாவை அறிமுகப்படுத்தியவர் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    minister thangamani says kamal and dinakaran afraid of byelection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X