நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி, கொள்ளை அடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் களவாணி... ஸ்டாலின்

Google Oneindia Tamil News

நாமக்கல்: பிரதமர் மோடி, காவலாளியாக அல்ல, கொள்ளை அடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் களவாணியாக இருப்பதாக திமுக தலைவர் ஸடாலின் விமர்சித்துள்ளார்.

நாமக்கல்லில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்த தேர்தலுக்கு பின் தானாக ஆட்சியை விட்டு இறங்கி ஓடவேண்டிய அவசியத்துக்கு எடப்பாடி ஆளாகிறார். தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி நிர்வாகத்தில் இருந்த முதல்வர் உள்பட ஆளும் தரப்பினர் அத்தனை பேரும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

 பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்! பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்!

முடங்கி வளர்ச்சி

முடங்கி வளர்ச்சி

பரமத்தியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கும் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 அதிமுக எம்பிக்கள் செய்த சாதனைகள் என்ன? நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், சரக்கு போக்குவரத்து, லாரி கட்டுமானம், சிமெண்ட், ஜவ்வரிசி உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சி முடக்கியுள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பால் நாமக்கல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரத்தை விற்று செலவு

வைரத்தை விற்று செலவு

பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியும், முதல்வர் பழனிசாமியின் எதற்கும் உதவாத ஆட்சியும் தொடரக் கூடாது. பிரதமர் மோடி, காவலாளியாக அல்ல, கொள்ளை அடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் களவாணியாக இருக்கிறார். கொடநாட்டில் அடித்த கொள்ளையில் கிடைத்த வைர ஆபரணங்களை மாற்றி தேர்தல் செலவினை ஆளும் கட்சி செய்கிறது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

650 கோடி ரூபாய் பணத்தால் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையே கொள்முதல் செய்த அதிமுகவின் அதிகார அத்துமீறல் அம்பலமாகி உள்ளது. 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலையே லஞ்சம் கொடுத்து விலைவாங்கிய தகவலை ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுளளது. மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி வந்த பின்பு அதிமுகவின் ஊழல்கள் உள்பட அனைத்து விதமான அத்துமீறல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரம் தாழ்ந்து விமர்சனம்

தரம் தாழ்ந்து விமர்சனம்

தேர்தல் கூட்டணிக்கு ஒரு நாள் முன்பு வரை அதிமுகவை பாமக எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்கள். பாமகவின் அன்புமணி ராமதாஸ் முதல்வர் பழனிச்சாமியை அறிவில்லாத முதல்வர் என்று சொன்னாரே. மண்டையில் மசாலா இல்லை என அன்புமணி சொன்னாரே. நான் அவர்களை போல் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
dmk leader mk stalin says, PM modi not chowkidar, he is thief
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X