நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை விட்டுட்டு போயிட்டியே சித்ரா.. கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை!

நாமக்கல் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் தாயும் மகளும் பலியானார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை!

    நாமக்கல்: "என்னை விட்டுட்டு போய்ட்டியே சித்ரா.." என்று மனைவி, குழந்தையின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதார் கணவன்! டூவீலரில் சென்ற மனைவி - மகள் மீது லாரி மோதி, அதன் லாரி சக்கரங்களும் ஏறி இறங்கிய கொடுமை நாமக்கல் அருகே நடந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் வட்டமலை வாத்தியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். 37 வயதாகிறது. குமாரபாளையம் மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சித்ரா, பவானியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு யஷ்வந்த் என்ற 9 வயது மகனும், இன்சிகா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்கள் தினமும் ஸ்கூலுக்கு வேனில்தான் சென்று வருகிறார்கள். சித்ராதான் டூவீலரில் ஏற்றி கொண்டு மெயின்ரோட்டில் தினமும் வேன் ஏற்றி விடுவார்.

    ஸ்கூல் வேன்

    ஸ்கூல் வேன்

    இன்றும் அப்படிதான் பிள்ளைகளை ஏற்றி கொண்டு மெயின் ரோடு வந்தார். முதலில் மகனை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட்டு, மகளை அவளது ஸ்கூல் வேனில் ஏற்ற ரோட்டை கடந்தார். அது நேஷனல் ஹைவே... அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று சித்ராவின் டூவீலர் மீது பலமாக மோதியது. மேலும், இருவரின் உடல் மீதும் மீது லாரி ஏறி இறங்கியதில், அங்கேயே உயிரிழந்தனர். இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    விசாரணை

    விசாரணை

    காலை நேரத்தில் பரபரப்பான இந்த சாலையில் நடந்த இந்த விபத்தை பார்த்து பொதுமக்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக குமாரபாளையம் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்ரா ஹெல்மெட் போடவில்லை என்று தெரிகிறது.

    கோமா நிலை

    கோமா நிலை

    சித்ராவின் மாமனார், போன வாரம், இதே இடத்தில்தான் ரோட்டை கடக்க முயன்றார். அப்போதும் இப்படிதான் ஒரு வாகனம் மோதி, கோமாவில் உள்ளார். அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் சித்ராவின் கணவர் ஜெயக்குமார்தான் பக்கத்திலேயே இருந்து கவனித்து வருகிறார்.

    கதறி அழுதார்

    கதறி அழுதார்

    இந்நிலையில், சித்ராவும், குழந்தையும் இறந்த தகவலை சொன்னதும், கதறி துடித்தது அனைவரையும் கலங்க வைத்தது. சித்ராவையும், குழந்தையையும் கட்டிப் பிடித்து கொண்டு அழுது கொண்டே இருந்தார். சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும், இந்த ஒரு மாசத்தில் 11 பேர் விபத்தில் சிக்கி உள்ளதாகவும், இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த பகுதி மேடு, பள்ளமாக இருக்கிறது என்றும், வரும் வாகனங்களும் ரொம்ப வேகமாக வருகிறது என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால், மேம்பாலம், சர்வீஸ் ரோடு அமைத்தால் இப்படி விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Mother and Daughter died in Road Accident near Namakkal and Police inquiry is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X