நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராசிபுரத்தில் பகீர் கிளப்பிய குழந்தை கடத்தல் விவகாரம்.. கைதான அமுதா உள்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கைதான 5 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை குறித்து ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அமுதா, கணவர் ராமச்சந்திரன், குழந்தை கடத்தல் புரோக்கர்கள் செல்வி, லீலா, பர்வீன், ஹசீனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Namakkal Court rejects bail plea of 5 in connection with Infant sale issue

இதுவரை எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையை வாங்கும் தம்பதிக்கே அக்குழந்தை பிறந்ததாக சான்றிதழையும் அமுதா உள்ளிட்டோர் பெற்று தந்துள்ளதால் பிறப்பு சான்றிதழ் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை.. இன்ஜினியரிங் மாணவர் கைது நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை.. இன்ஜினியரிங் மாணவர் கைது

இந்த நிலையில் அமுதா, கணவர் ராமச்சந்திரன், லீலா, பர்வீன், ஹசீனா ஆகியோர் ஜாமீன் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Namakkal court rejects the bail plea of 5 arrested in Infant sales case near Rasipuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X