நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டியலின மாணவனை.. மலம் அள்ள வைத்த ஆசிரியை.. 5 வருட சிறை.. நாமக்கல் கோர்ட் அதிரடி

மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

நாமக்கல்: 2-ம் கிளாஸ் படித்து வந்த பட்டியலின மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியைச் சேர்ந்த தம்பதி ரகுநாதன் - விஜயலட்சுமி.. இதில் விஜயலட்சுமி ராமாபுரம்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் டீச்சராக உள்ளார்.. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்தார். இவருக்கு 35 வயதாகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி 3-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே வகுப்பறையில் விஜயலட்சுமி பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது 3ஆம் வகுப்பு மாணவன், தன்னை அறியாமலேயே வகுப்பறையிலேயே மலம் கழித்துள்ளான்.

 அப்பா எங்கே.. எப்போ வருவாரு.. கதறும் வில்சனின் மகள்.. சமாதானம் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்! அப்பா எங்கே.. எப்போ வருவாரு.. கதறும் வில்சனின் மகள்.. சமாதானம் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்!

தொட மாட்டோம்

தொட மாட்டோம்

இதை பார்த்த விஜயலட்சுமி, 2-ம் வகுப்பு பட்டியலின மாணவனை கூப்பிட்டு, அந்த மலத்தை அள்ளி வெளியே போட சொல்லியுள்ளார்... 7 வயதான குழந்தையும், ஒரு பேப்பரில் கழிவை எடுத்து வெளியே போட்டான்.. இதை சக மாணவர்கள் கிண்டல் செய்து, "உன்னை தொட மாட்டோம்" என்று கேலி செய்துள்ளனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த சம்பவத்தை வீட்டில் அழுதுகொண்டே சிறுவன் பெற்றோரிடம் சொல்லவும், அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியை விஜயலட்சுமியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.

ஜாமீன்

ஜாமீன்

தொடர்ந்து பெற்றோர், நாமக்கல் போலீசில் புகார் தரவும், அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விஜயலட்சுமி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு மாவட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விஜயலட்சுமி, ஜாமீனில் வெளிவந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது.

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

அதில், விஜயலட்சுமிக்கு, 7 வருட ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தனசேகரன் தீர்ப்பு வழங்கினார். இதில், அபராத தொகை செலுத்தப்பட்டது. ஆசிரியை விஜயலட்சுமி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விஜயலட்சுமிக்கு ஜெயில் தண்டனை என்பதால், ஆசிரியர் பணியிலிருந்து, அவர் நிரந்தரமாக நீக்கப்படலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
namakkal gov school teacher vijayalakshmi sentenced five years for insulting 2nd std student
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X