• search
நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரூ.16 கோடி ஊசி.. ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலே குழந்தை மித்ராவை காப்பாற்றலாம்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மித்ராவுக்கு மருந்து வாங்க வழியின்றி பெற்றோர்கள் தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஜூலை 5ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 பேர் கொடுத்தாலே குழந்தையை காப்பாற்ற முடியும் என்பதால் நிதி உதவி தருமாறு கோரியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார், இவருடைய மகள் மித்ரா, மிகவும் அரிய மற்றும் நூதன முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 namakkal Parents race against time to raise Rs 16 crore to save daughter

அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன் பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சு விடவும் உணவை விழுங்க முடியாமலும் பிற குழந்தைகள் செய்யக்கூடிய சின்னஞ் சிறு செயல்களையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

சிறுமி மித்ராவின் உயிரை காப்பாற்றுவதற்காக ஸோல்கென்ஸ்மா (Zolgensma) என்ற ஒரு முறை மரபணு மாற்று சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 16 கோடி ரூபாய் செலவாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம் இதை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த மருந்தை இந்தியாவிற்கு கொண்டு வர இறக்குமதி வரி 6 கோடியாகும். மொத்தம் 22 கோடி தேவையாகும்.

சிறுமி மித்ராவுக்கான மருத்துவ சிகிச்சைக்காக தங்களால் ஆன அனைத்து வழிகளிலும் முயற்சித்தும் அவருடைய குடும்பத்தினரால் சிகிச்சைக்கான முழு தொகையையும் திரட்ட இயலவில்லை. எனவே தன்னுடைய மகள் மித்ராவின் சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை திரட்டுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை கோரி அவர் ஆன்லைன் வழியாக முயற்சியை தொடங்கியிருக்கிறார்.

குழந்தை மித்ராவை காப்பாற்ற உதவி செய்ய விரும்புவோர் 95006 23402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://linktr.ee/mithrafightssma என்ற லிங்க் மூலம் உதவி செய்யலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுவரை 9 கோடி சேர்ந்துள்ளது. ஜுலை 5ம் தேதிக்கு முன்பு இன்னும் 7 கோடி தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தால் கூட குழந்தை மித்ராவை காப்பாற்ற முடியும் என்பதால் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் குழந்தையை காப்பாற்ற உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
Parents race against time to raise Rs 16 crore to save daughter K. Satheesh Kumar said that am raising funds for my daughter, KS Mithrra who is suffering from Spinal muscular atrophy (SMA). The family has done all it can to collect the total amount required for the treatment but Rs.160000000 more is required to pay for all the medical expenses.As the amount required is huge, I request you to kindly contribute towards the treatment and help during this time of need. Each contribution is important!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X