நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திரயான்-2.. "செல்லக்குட்டி" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Namakkal Village people gets upset on hearing Lander's connection lost

    நாமக்கல்: சந்திரயான்-2 விண்கல திட்டம் நிலவில் தரையிறங்கும் திட்டத்தில் லேசான பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்கு மணல் அளித்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூருக்கும், திருச்செங்கோட்டிற்கும் இடையே உள்ளன சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்கள். இந்த கிராமங்களில் ஆய்வு செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையினர், நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் மண், பாறை வகைகள் இந்த கிராமங்களில் உள்ளதை அறிந்தனர்.

    விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சிவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி

    ஆய்வு

    ஆய்வு

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் மணல் குறித்த ஆய்வை செய்தனர்.

    50 டன் மண்

    50 டன் மண்

    அப்போது இரு கிராமங்களில் இருந்தும் சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்காக சுமார் 50 டன் மண்ணை எடுத்து சென்றனர்.

    ரோவர் வாகனம்

    ரோவர் வாகனம்

    இந்த மண்ணில்தான் ரோவரின் ஓடுதிறன் சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சந்திரயானின் லேண்டருடனான இஸ்ரோவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தனது ரோவருடன் நிலவில் தரையிறங்கியதா என தெரியவில்லை.

    சோகம்

    சோகம்

    இதனால் ரோவர் சோதனை ஓட்டத்துக்கு மணல் அளித்த கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் லேண்டரின் இருப்பிடத்தை ஆர்பிட்டர் வாகனம் படம் பிடித்துள்ளதால் அம்மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    English summary
    Namakkal Village people gets upset on hearing Lander's connection lost as they give sand for rover's trial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X