• search
நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குளிக்க போன தீபா.. உள்ளாடையை வாயில் திணித்து.. 17 வயசு பையனின் அட்டகாசம்.. அதிர்ந்து போன கொல்லிமலை!

|

நாமக்கல்: மாடு மேய்க்க போன தீபா, நிர்வாண நிலையில்.. சடலமாக கிடந்தது எப்படி என்றும், அவரை கொன்றது யார் என்றும் தெரியவந்தது... காப்புக் காட்டில் தீபாவின் பாவாடையை கழட்டி, அதை அவர் வாயிலேயே திணித்து பலாத்காரம் செய்துள்ளார் அருண் என்பவர்.. 25 வயசு தீபாவை 17 வயசு அருண் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் கொல்லி மலையை உலுக்க செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மனைவி தீபா.. 25 வயதாகிறது.. 7 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பிரதானமே விவசாயம்தான்.. நடேசன் விவசாயம் பார்த்து வருகையில், அவருக்கு உதவியாக தீபா ஆடு மாடுகளை மேய்க்க செல்வார். அப்படித்தான் சம்பவத்தன்றும், ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு வருவதாக சொன்னார்.

மாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி!

தீபா

தீபா

அப்படியே துணிகளையும் துவைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, கீரைக்காடு காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் தீபா வீட்டுக்கு திரும்பவே இல்லை. அதனால் பதறி போன நடேசன், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினார்.. அங்கேயும் இல்லை.. அதனால் உறவினர்களும் சேர்ந்து தீபாவை தேடினர்.

 கதறி அழுதார்

கதறி அழுதார்

இரவெல்லாம் தேடியும் கிடைக்காமல், விடிந்த பிறகுதான், கீரைக்காடு காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் தீபாவின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன.. வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.. மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுதார் நடேசன்.. போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவும் அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

தீபாவை யாராவது பலாத்காரம் செய்திருக்கலாம் என்று ஆரம்பத்திலேயே கருதப்படுகிறது.. அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து திணித்து, அதன்பிறகு பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், அதன்பிறகு அடித்து கொன்றிருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டது... இதையடுத்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதன்படி தீபா பலாத்காரம் செய்யப்பட்டு கொன்றது உறுதியானது.

 விசாரணை

விசாரணை

தீபாவின் உடம்பெல்லாம் கற்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன.. எப்படியும் காட்டு பகுதியில்தான் அவரை கொலை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.. சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அருண் என்பவர் சிக்கினார்.. 17 வயசுதானாம் இவருக்கு.. தீபாவை பலாத்காரம் செய்து, கல்லாலேயே அடித்து கொன்றுள்ளார்.. இவரை போலீசார் கைது செய்தனர்.. கொல்லிமலை அருகே உள்ள பொல்லாகாட்டுப்பட்டி குண்டூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர்தான் அருண்.

 அருண்

அருண்

சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, ஆத்துக்காடு ஓடையில் தீபா குளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது தீபா குளிப்பதை மறைந்து நின்று அருண் பார்த்துள்ளான். பிறகு குளித்து கொண்டிருந்த தீபாவை தன் ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார்... இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, அருண் கன்னத்தில் ஒரு அறை அறைந்தார்.. அறைந்ததோடு, கடுமையாக வார்ன் செய்துவிட்டு வீட்டுக்கு விரட்டி விட்டுள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 13-ம் தேதியன்று ஆத்துக்காடு ஓடைக்குத் துணிகளை துவைக்க சென்றார்.

பாவாடை

பாவாடை

பிறகு, மாடுகள் காப்புக்காட்டுக்குள் சென்றதால், அதை விரட்டுவதற்காக பின்னாடியே சென்றார்.. அப்போது துரத்தி சென்ற அருண் தீபாவை ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளான்.. காப்புக்காட்டில் தனியாக சிக்கி கொண்ட தீபாவால் தப்பிக்க வேறு வழியில்லை.. அதனால், சத்தம் போட்டுள்ளார். அதற்குள் அருண், தீபா அணிந்திருந்த பாவாடையை கழட்டி, வாயில் திணித்து இறுக்கமாக கட்டிவிட்டார்.

 கொடூர கொலை

கொடூர கொலை

பிறகு பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து தலையிலும் பலமாக தாக்கிஉள்ளார்.. இதில் தீபா மயங்கி விழுந்துவிட்டார்.. அதன்பிறகு தீபாவை நீண்ட நேரம் சீரழித்துள்ளான் சிறுவன் அருண்.. இறுதியாக, திரும்பவும் அதே கல்லை எடுத்து கொலையும் செய்துவிட்டார்.. பிறகு தீபாவின் செல்போனை எடுத்து, தன் சொந்தக்காரருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லிவிட்டு, தலைமறைவாக இருக்க போவதாக சொல்லிவிட்டு, அந்த போனையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்.

 கொல்லி மலை

கொல்லி மலை

தீபாவின் செல்போனை ஆய்வு செய்யும்போதுதான் அருண் சிக்கி உள்ளான்.. இவன் மைனர் என்பதால் இப்போதைக்கு ஜெயிலிலும் போட முடியாது.. அதனால் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க வாழாவந்திநாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்... 25 வயசு தீபாவை 17 வயசு சிறுவன் கற்பழித்து கொன்ற சம்பவம் கொல்லி மலையை அதிர வைத்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
nude body: 25 year old woman dead body in the kollimalai forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X