நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராசிபுரம் குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் 3 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராசிபுரம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மேலும் 3 துணை புரோக்கர்கள் கைது

    நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 3 இடைத்தரகர்கள் , ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வி என்ற பெண், ஏழைக் குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    rasipuram child sales: 3 brokers filled bail petition in namakkal court

    இதுதொடர்பாக பெற்றோர் ஒருவருடன் செல்வி பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் பரவியதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றிய முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வின், ஹசீனா, லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

    பணப்பட்டுவாடா புகார்.. பறக்கும் படையினர் சோதனை நடத்திய தூத்துக்குடி ரிசார்ட்டுக்கு ஸ்டாலின் வருகைபணப்பட்டுவாடா புகார்.. பறக்கும் படையினர் சோதனை நடத்திய தூத்துக்குடி ரிசார்ட்டுக்கு ஸ்டாலின் வருகை

    இதனிடையே செல்வி பேசும் போது, பிறப்புச் சான்றிதழை நகராட்சி அலுவலகத்தில் குழந்தையை வாங்கும் பெற்றோரின் பெயருக்கே வாங்கித்தருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இரண்டு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக கைதான அருள்சாமி, லீலா, செல்வி, ஆகியோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

    3 பேரின் ஜாமீன் மனுவையும் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

    English summary
    namakkal rasipuram child sales issue : 3 brokers filled bail petition in namakkal court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X