நாமக்கல்லில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
நாமக்கல்லில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சிப்பதாக மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியருக்கு ஆதரவாக சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதிவாணன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது பெற்றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாலியல் புகார் அளித்தனர். அந்த மனுவில் ஆசிரியர் மதிவாணன் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சிக்கிறார். அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி எழுப்பியுள்ள புகார் உண்மையில்லை. உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் பணியாற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் இரவு 8 மணியைக் கடந்தும் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் மதிவாணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
-
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications