ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ
Recommended Video
நாமக்கல்: ஸ்கூலிலேயே ஜெயந்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டார் வாத்தியார் சரவணன். இந்த விஷயம் அறிந்த ஊர்மக்கள், கிளாஸ் ரூமுக்குள்ளேயே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்து இழுத்து சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதே பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆசிரியராக 4 வருஷமாக வேலை பார்ப்பவர் சரவணன். இவருக்கும், அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வரும் ஜெயந்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் ஸ்கூல் பாத்ரூமிலேயே உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதை மாணவர்களே நேரடியாக பலமுறை பார்த்ததாகவும் தெரிகிறது.

டிபாசிட்
இதுகுறித்து பலமுறை இருவருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும் பெற்றோர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, தபால் நிலையத்தில், 'டிபாசிட்' வாங்கும் முகவராக ஜெயந்தி உள்ளார். ஆனால் சில மாதங்களாக பொதுமக்களிடம் பெற்ற டிபாசிட் பணத்தை, தபால் நிலையத்தில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்தது.

சரவணன்
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த ஜெயந்தியும், சரவணனும், தகாத உறவில் பள்ளி வளாகத்திலேயே இருந்திருக்கிறார்கள். இதை பார்த்துவிட்ட ஒரு மாணவன், அவன் வீட்டில் இதை பற்றி சொல்ல, கொஞ்ச நேரத்தில் ஊரே திரண்டு ஸ்கூலுக்கு வந்துவிட்டது. ஆனால் சரவணனும், ஜெயந்தியும் ஸ்கூலில் இல்லை. இதனால் எல்லா கிளாஸ் ரூமூக்கு உள்ளேயும் புகுந்து இருவரையும் தேட ஆரம்பித்தனர்.

தப்பி சென்றார்
கடைசியில், 2 பேரும் ஸ்கூல் பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததை மக்கள் பார்த்துவிட்டனர். நிறைய பேர் பேசும் சத்தம் கேட்டதும் உஷாரான, சரவணன் முதலில் ஜெயந்தியை அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பி செல்ல வைத்துவிட்டார். ஜெயந்தி போகும்போது, பள்ளியில் இருந்த டிபாசிட் புத்தகங்களை எடுத்து சென்றுள்ளார்.

ஜெயந்தி எங்கே?
இதன் பிறகு எதுவும் தெரியாதது போல கிளாஸுக்குள் சென்றார் சரவணன். பின்னாடியே போன ஊர் மக்கள், "எங்கே ஜெயந்தி" என்று கேட்டு சரவணனை அடித்து உதைத்து தரதரவென சட்டையை பிடித்து இழுத்து வந்தனர். அப்போது ஜெயந்திக்கு ஆதரவாக சரவணன் பேசவும், இன்னம் ஆவேசமடைந்த பொதுமக்கள், பள்ளி வளாகத்தில், அமர வைத்தனர்.

நடவடிக்கை
"புள்ளைங்க படிக்கிற இடத்துல இனி இப்படி நடந்துப்பியா, நடந்துப்பியா" என்று கேட்டு வெளுத்து எடுத்தனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து சரவணனை மீட்டு ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அத்துடன் கல்வி அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்து, பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆசிரியரை நைய புடைக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications