நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்!

சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்காக செய்யப்பட்ட சோதனைகளுக்கு பின் இரண்டு நாமக்கல் கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

Google Oneindia Tamil News

நாமக்கல்: சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்காக செய்யப்பட்ட சோதனைகளுக்கு பின் இரண்டு நாமக்கல் கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு இருக்கிறது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும்தான் நிலவில் தரையிறங்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டும் நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டது. இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது.

எப்படி செய்தது

எப்படி செய்தது

அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி, விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு எப்படி

முன்பு எப்படி

ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண் வாங்கியது. இது நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மண் ஆகும். மொத்தம் 10 கிலோ மண்ணை இஸ்ரோ வாங்கியது. இதன் ஒரு கிலோ 150 டாலருக்கு வாங்கப்பட்டது.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் சந்திரயான் 2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. அதனால் இப்போது இஸ்ரோ நாசாவை நம்பவில்லை. பட்ஜெட் காரணங்களால் இந்தியா நாசாவிடம் இருந்து மணல் வாங்கவில்லை. அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது.

கிராமம்

கிராமம்

ஆம் நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருந்து மண் வாங்கி உள்ளது. இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிசாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

செம

செம

இதில் செய்யப்பட சோதனையின் அடிப்படையில்தான் தற்போது சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் இறங்க உள்ளது. இதற்காக அந்த இரண்டு கிராம மக்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சந்திரயான் 2விற்கு உதவி செய்வதே பெரிய மகிழ்ச்சி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
These two Namakkal villages helped in Chandrayaan 2 research - See How.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X