• search
நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நாங்க இரண்டு பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. ஆத்திரத்தில் கொன்னுட்டேன்.. சிக்கிய இளைஞர்!

Google Oneindia Tamil News
  புதிதாக இன்னொருவருடன் உறவு... பெண்ணை கொன்ற கள்ளக்காதலன்

  நாமக்கல்: "நானும், புருஷனும் இருக்கும்போது.. இன்னொருத்தனுடனும் அவள் உறவு வெச்சிருந்தா.. அதான் ஓட்டலில் ரூம் போட்டு வரவழைத்தேன்... ஜாலியா இருந்தேன்.. அப்பறம் கழுத்தை துப்பட்டாவில் நெரித்து கொன்னுட்டேன்.. பிணத்தை ஒரு போர்வையில் சுத்தி, ஆத்தங்கரையில் போட்டுவிட்டேன்" என்று 24 வயது இளைஞர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

  திருப்பூர் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த திருமங்கை என்ற 33 வயது பெண்ணை காதலித்து, 5 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். ராமபுதூரில் புது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திடீரென மனைவியை காணவில்லை.

  சம்பவத்தன்று, மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு போறேன் என்று ஸ்கூட்டி எடுத்து கொண்டு போனவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன ரமேஷ், மனைவியை தேடி அலைந்தார். அப்போதுதான், மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், திருமங்கை சடலமாக கிடந்தது தெரியவந்தது.

  ஐ மிஸ் யூ.. என் போன் ஹேங் ஆயிருச்சு.. வேற வாங்கிட்டுத்தான் வருவேன்.. கதறி குமுறி அழுத தனம்!ஐ மிஸ் யூ.. என் போன் ஹேங் ஆயிருச்சு.. வேற வாங்கிட்டுத்தான் வருவேன்.. கதறி குமுறி அழுத தனம்!

  விசாரணை

  விசாரணை

  திருமங்கையின் கைகள் துப்பட்டாவால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது... வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டு இருந்தது... கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது... தகவலறிந்து மூலனூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் திருமங்கையின் செல்போனும் ஆராயப்பட்டது.. அப்போதுதான், சேலத்தை சேர்ந்த தனபால் என்பவருடன் திருமங்கை கடைசியாக பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தபோது, தனபால்அளித்த வாக்குமூலம் இதுதான்:

  ஓட்டல்

  ஓட்டல்

  எனக்கு 24 வயதாகிறது.. நாமக்கல்லில் ரூமில் தங்கி, பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தேன்.. அப்போ அங்க இருந்த ஒரு ஓட்டலுக்கு தினமும் சாப்பிட போவேன்.. அங்குதான் எனக்கு திருமங்கை அறிமுகம் ஆனார்.. எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.. அடிக்கடி என் ரூமுக்கும் வந்து போவார்... நாங்கள் ஜாலியாக இருப்போம். இந்த சமயத்தில்தான், ரமேஷை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனாலும் எங்களுக்குள் உறவு நீடித்தது. ரமேஷ், என்னை தவிர, வேறு ஒருவருடனும் திருமங்கை தொடர்பில் இருந்தார்.

  ஆத்திரம்

  ஆத்திரம்

  இது எனக்கு அதிர்ச்சியை தந்தது.. அதனால் எங்களுக்குள் சண்டையும் வந்தது. அந்த விஷயத்தை பற்றி பேசினாலே, அதை தவிர்த்தார் திருமங்கை.. அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று என் ரூமுக்கு வருமாறு போன் செய்தேன்.. அதன்படியே திருமங்கை வந்தார்.. வழக்கம்போல் ஜாலியாக இருந்தோம்.. பிறகு, வேறு ஒருவருடன் பழகுவது பற்றி கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் ஆத்திரத்தில் அறைந்தேன்.. இதில் கீழே மயங்கி விழுந்துவிட்டார்.

  கைது

  கைது

  உடனே அவரது துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன்.. கைகளையும் அதே துப்பட்டாவால் கட்டி, சடலத்தை ஒரு போர்வையால் சுற்றி, வேனில் வைத்து கொண்டு போய், அமராவதி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டேன்" என்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

  English summary
  youth kills young woman due to illegal relationship near tharapuram and police arrested him
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X