நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயங்கரம்.. அமெரிக்காவில் கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிசூட்டில் 16 பேர் பலி.. யாரந்த மர்ம நபர்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சிகள் நடந்த பல்வேறு இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஆனால் அதுதான் உண்மை. அதாவது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி. ஆனால், அந்நாட்டில் உள்ள மொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை மட்டும் 39 கோடி. அதாவது அந்நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு துப்பாக்கி நிச்சயம் இருக்கும். இதுதான் இந்த காட்டு மிராண்டிதனமான வன்முறைக்கு வித்திட்டிருக்கிறது.

16 people died in a single day in the shooting in the United States

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 200க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடக்கிறது. அந்நாட்டில் ஓராண்டில் நடைபெறும் உயிரிழப்புகளில் 85% உயிரிழப்புகள் துப்பாக்கி சூடு தொடர்புடையவைதான். கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 300லிருந்து 450 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி 2020-2022ம் ஆண்டு வரை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 690ஐ தொட்டுள்ளன.

இந்த ஆண்டு மட்டுமே சுமார் 200க்கும் அதிகமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று அமெரிக்கா முழுவதும் தேசிய நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரராக இருந்த தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு குடும்பத்தினரும், நாட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்ததற்காக பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கிறது. 8 மாகாணங்களில் உள்ள கடற்கரைகள், உயர்நிலைப்பள்ளிகள், பைக் பேரணி நடைபெற்ற இடங்கள் போன்றவற்றில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் தற்போது வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ரஷ்ய தலைநகரையே குறிவைத்த உக்ரைன்.. ரஷ்ய தலைநகரையே குறிவைத்த உக்ரைன்.. "தாழ்வாக பாய்ந்து வந்த டிரோன்கள்.." மாஸ்கோவில் திடீர் பரபரப்பு

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் காவல்துறையினரும் செய்வதறியாது குழம்பினர். இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு இந்திய இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கேரளாவை சேர்ந்த ஜூட் சாக்கோ அமெரிக்காவில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

16 people died in a single day in the shooting in the United States

இவ்வாறு இருக்கையில், அவர் தனது பகுதி நேர வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது மர்ம நபர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனையடுத்து மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். சக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்றும் மக்கள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

English summary
While the National Memorial Day events were held in the United States yesterday, there were indiscriminate shooting incidents at various places where these events took place. 16 people died in this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X