நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. என்ன ஒரு முறை.. டிரம்பே மிரண்டு போயிருப்பார்னா பாருங்களேன்!

ஐநா மாநாட்டில் 16 வயது சிறுமி கிரிட்டா சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Climate activist Greta Thunberg addresses the UN

    நியூயார்க்: முறைன்னா முறை அப்படி ஒரு முறை.. ஏன்தான் அதிபர் ஆனோமோ என்று டொனால்ட் டிரம்ப் மிரண்டு போகும் அளவுக்கு முறைத்து பார்த்தாள் அந்த 16 வயது சிறுமி!

    ஐநா., சபையின் 74வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். ஆனால், இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி கலந்து கொண்டு பேசினாள். அவள் பெயர் கிரேட்டா. காலநிலை மாற்றத்தின் மீது அதிக பிடிப்பு இருப்பவள். உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு எல்லாம் கிரேட்டாதான் எல்லாமுமாக இருப்பவள்.

    ஐநா பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, திடீரென அந்த அரங்குக்குள் டிரம்ப் நுழைந்தார். மோடியின் உரையை கேட்பதற்காகவே அங்கு வந்திருந்தார். இதனை அங்கிருந்தவர்களே எதிர்பார்க்கவில்லை, டிரம்ப் வருவதாகவும் யாருக்கும் தகவலும் இல்லை. அதனால் அங்கிருந்த தலைவர்கள் டிரம்பை பார்த்ததும் ஆச்சரியப்பட்டனர்.

    உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்.. நீங்கள் எல்லாம் அரக்கர்கள்.. உலகத் தலைவர்களை உலுக்கிய சிறுமி!உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்.. நீங்கள் எல்லாம் அரக்கர்கள்.. உலகத் தலைவர்களை உலுக்கிய சிறுமி!

    பின்னர் அங்கேயே அமர்ந்திருந்த மோடியின் பேச்சை கவனித்தார். சுமார் 10 நிமிடங்கள் உரையை கேட்டுவிட்டு அங்கிருந்து டிரம்ப் புறப்பட்டு சென்றார். ஆனால், டிரம்ப் உள்ளே நுழைந்ததுமே, ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த கிரேட்டா முறைத்து பார்த்தாள்.

    அந்த பார்வையில் அவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும் தென்பட்டது. மன ரீதியாக அந்த அளவுக்கு டிரம்ப்பின் கொள்கை, செயல்பாடு அவளை பாதித்துள்ளதாக அந்த பார்வை உணர்த்தியது. ஏதோ மோடி பேசுவதை ஆசையாக கேட்கலாம் என்று வந்திருந்தார் டிரம்ப்.. ஆனால் சிறுமி முறைத்து பார்க்கும் இந்த வீடியோ இப்போது மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

    English summary
    16 year old Activist Greta asks at World leaders including Donald trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X