• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"உங்களுக்கெல்லாம் எவ்ளோ தைரியம்.. என்ன நினைச்சிட்டிருக்கீங்க".. ஸ்கூல் போக ஆரம்பித்தார் கிரேட்டா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்? உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்? யாருக்காவது எங்க மீது அக்கறை இருக்கா" என்று டிரம்ப் உள்பட உலக நாட்டு தலைவர்களை நேருக்கு நேர் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய சிறுமியை ஞாபகம் இருக்கா? அவரை பற்றின ஒரு செய்திதான் இது!

  India மாணவர்களுக்காக குரல் கொடுத்த Greta Thunberg | OneIndia Tamil

  அதற்கு முன்னதாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐநா. சபையின் 74வது ஆண்டு கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது... அந்த கூட்டத்தில் பருவநிலை நடவடிக்கை மாநாடு ஒன்று நடந்தது.

   16 year old girl Greta Thunberg returns to school for a year

  அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்... இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியும் கலந்து கொண்டு பேசினார். அவர் பெயர் கிரேட்டா தன்பெர்க்... காலநிலை மாற்றத்தின் மீது அதிக பிடிப்பு இருப்பவர்... உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு எல்லாம் எல்லாமுமாக இருப்பவர் இந்த கிரேட்டாதான்!

  அந்த கூட்டத்தில் கிரேட்டா பேசும்போது "நான் இந்நேரம் இங்கே இருக்கவே கூடாது... ஸ்கூலில் படிச்சிட்டு இருந்திருக்க வேண்டும்.. ஆனால் என் கனவு, குழந்தை பருவத்தினை நீங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள்... பேரழிவின் தொடக்கத்தில் நாம எல்லாரும் நின்று கொண்டிருக்கிறோம்.

  ஆனால் நீங்களோ, பணம், பொருளாதார வளர்ச்சி என்று கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழல் ரொம்ப மோசமாக சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது... மக்கள் எத்தனையோ பேர் செத்து கொண்டிருக்கிறார்கள்? ஆனால் நீங்க எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை... இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீங்களே.. உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்? எங்களை மட்டும் தோல்வியடைய செய்துடாதீங்க. அப்படி செய்தால், உங்களை எப்பவுமே நாங்கள் மன்னிக்க மாட்டோம்" என்று ஆவேசமாக பேசிய கிரேட்டாவை ஆச்சரியத்துடன் எல்லாருமே பார்த்தனர்.

  அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, திடீரென உள்ளே என்ட்ரி தந்தார் டிரம்ப்.. மோடியின் உரையை கேட்பதற்காகவே அங்கு வந்திருந்தார்... டிரம்ப் வருவதாக யாருக்குமே எந்த தகவலும் இல்லை... சர்ப்ரைஸாக வந்து நின்ற டிரம்பை எல்லாரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

  ஆனால், டிரம்ப் உள்ளே நுழைந்ததுமே, ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த கிரேட்டா அவரை முறைத்து பார்த்தார்.. முறைன்னா முறை அப்படி ஒரு முறை.. ஏன்தான் அதிபர் ஆனோமோ என்று டொனால்ட் டிரம்ப் மிரண்டு போகும் அளவுக்கு முறைத்து பார்த்தார் இந்த சிறுமி.. அந்த பார்வையில் அவ்வளவு ஆத்திரம் தென்பட்டது. மன ரீதியாக அந்த அளவுக்கு டிரம்ப்பின் கொள்கை, செயல்பாடு அவரை பாதித்துள்ளதாக அந்த பார்வை உணர்த்தியது... கிரேட்டாவின் பேச்சும், கிரேட்டாவின் இந்த வெறுப்பை உமிழ்ந்த பார்வையும் அன்று சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.

  என்னது.. அண்ணாமலை பாஜகவில் சேர்ந்துட்டாரா.. அப்போ ரஜினிகாந்த் கட்சி கதி?என்னது.. அண்ணாமலை பாஜகவில் சேர்ந்துட்டாரா.. அப்போ ரஜினிகாந்த் கட்சி கதி?

  அதற்கு பிறகு கிரேட்டா பற்றின செய்திகள் அவ்வளவாக வெளியாகவில்லை.. ஒரு வருடம் ஆன நிலையில், ஸ்கூலுக்கு போயுள்ளாராம் கிரேட்டா... காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த கிரேட்டா, இப்போது ஸ்கூலுக்கு திரும்பியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளர்.

  ஆனால், எந்த ஸ்கூலில் படிக்க போகிறார் என்பதை அவர் தெரியப்படுத்தவில்லை.. "இறுதியாக திரும்பவும் ஸ்கூலில் சேர மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது"என்று தெரிவித்துள்ளார்... இதையடுத்து கிரேட்டாவுக்கு ட்விட்டர்வாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தபடியே வருகிறார்கள்... எப்படியோ மறக்க முடியாத சிறுமியாக கிரேட்டா மக்கள் மனசில் பதிந்து விட்டதையே இது பிரதிபலித்து காட்டுகிறது!

  English summary
  16 year old girl Greta Thunberg returns to school for a year
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X