நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செவ்வக வடிவில் 2 ராட்சச ஐஸ் பாறை.. விஞ்ஞானிகளை உறைய வைத்த வடிவம்.. அண்டார்டிகா அதிசயம்!

அண்டார்டிகா பகுதியில் நாசா இரண்டு பெரிய ராட்சச ஐஸ் பாறைகளை கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அண்டார்டிகா பகுதியில் நாசா இரண்டு பெரிய ராட்சச ஐஸ் பாறைகளை கண்டுபிடித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்து அண்டார்டிகா மீது கடந்த சில நாட்களாக அதிக அக்கறை கொண்டுள்ளது. அங்குள்ள ஐஸ்கட்டிகளை பாதுகாப்பது மட்டும்தான் கடல் மட்டத்தை கட்டுப்படுத்த உதவும்.

இந்த நிலையில் அண்டார்டிகா பகுதியில் நாசா கண்டுபிடித்த ஐஸ் கட்டிகள் முக்கியத்துவம் பெறுகிறது. நாசா இரண்டு பெரிய ராட்சச ஐஸ் பாறைகளை கண்டுபிடித்துள்ளது.

[இந்தோனேசிய விமான விபத்து.. 189 பேர் பலியாக காரணம் என்ன?.. ஜாவா கடலில் கிடைத்தது பிளாக் பாக்ஸ்]

நாசா என்ன செய்கிறது

நாசா என்ன செய்கிறது

அண்டார்டிகாவின் ஐஸ் பாறைகளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்காக ஆள் இல்லா விமானம் மற்றும் ஆள் உள்ள சாதாரண விமானங்களை வைத்து அங்கு சோதனை செய்து வருகிறது. எந்த ஐஸ் பாறைகள் எவ்வளவு உருகுகிறது, என்ன பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சோதனை செய்து வருகிறது.

கண்டுபிடித்தார்

கண்டுபிடித்தார்

இப்படி சோதனை நடத்தும் சமயத்தில்தான் ஜெர்மி ஹெர்பெக் என்று நாசா விஞ்ஞானி பெரிய ஐஸ் பாறைகள் இரண்டை கண்டுபிடித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு பாறைகளும் செவ்வக வடிவத்தில் உள்ளது. இதை பார்த்தவுடன் புகைப்படம் எடுத்து ஹெர்பெக் இணையத்தில் வெளியிட்டார்.

நல்ல வடிவம்

நல்ல வடிவம்

இதில் ஒரு பாறை 1200 சதுர மீட்டரும், இன்னொரு பாறை 2000 சதுர மீட்டரும் கொண்டது. பார்க்கவே கண்ணை கவரும் வகையில் ராட்சச வடிவம் கொண்டதாக இது உள்ளது. இந்த பாறைக்கு வடிவத்தை போல வேறு ஒரு பனிப்பாறையை இதற்கு முன் பார்த்து இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

என்ன ஆச்சர்யம்

என்ன ஆச்சர்யம்

மேலும் இந்த பாறை எப்படி சரியாக செவ்வகமாக இருக்கிறது என்று எல்லோரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். உருக உருக கூட அந்த பாறை தனது செவ்வக வடிவத்தை தக்க வைத்து வருகிறது. இந்த ஆச்சர்யம் எப்படி நடக்கிறது என்பதுதான் நாசா விஞ்ஞானிகளை குழப்பி இருக்கிறது.

English summary
2 Rectangular Icebergs Spotted in Antarctica by NASA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X