நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழைகளின் ஹீரோ.. இடதுசாரி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதே கலக்கும் பெர்னி.. டிரம்பிற்கு அதிர்ச்சி

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகி பெர்னி சாண்டர்ஸ் தற்போது அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகி பெர்னி சாண்டர்ஸ் தற்போது அங்கு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடக்கும். டிசம்பர் இறுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அந்நாட்டு புதிய அதிபர் ஜனவரியில் பொறுப்பேற்பார்.

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

அதே சமயம் இன்னொரு பக்கம் ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நபர்களை தேர்வு செய்வதற்கான விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கு ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பிரதிநிதி இருப்பார். மொத்தம் 1,991 பிரநிதிகள் இப்படி அந்தகட்சிக்கு இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்கள்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக நிற்க முடியும்.

ஜனநாயக கட்சி எப்படி

ஜனநாயக கட்சி எப்படி

ஜனநாயக கட்சி சார்பாக பெர்னி சாண்டர்ஸ், ஜோ பிடன், பிட்டே புட்டிக், எலிசபெத் வாரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கான விவாதம் தற்போது அங்கு நடந்து வருகிறது. இதில் தற்போது பெர்னி சாண்டர்ஸ் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக ஏற்கனவே 58 பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். அதேபோல் ஜோ பிடனுக்கு ஆதரவாக 50 பிரநிதிகள் வாக்களித்துள்ளனர். பிட்டேவிற்கு ஆதரவாக 26 பேர் வாக்களித்துள்ளனர்.

அதிக நிதி

அதிக நிதி

இன்னொரு பக்கம் பெர்னி சாண்டர்ஸ் நிதி திரட்டுவதில் முன்னிலை வகிக்கிறார். கடந்த மாதம் 20 மில்லியன் டாலர் நிதியும், இந்த மாதம் 26 மில்லியன் டாலர் நிதியும் திரட்டி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களில் 46 மில்லியன் டாலர் திரட்டிய ஒரே அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் மட்டுமே. இவருக்கு ஏழை மக்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், அடித்தட்டு மக்கள் அதிகம் நிதி அளிக்கிறார்கள்.

செம பெர்னி

செம பெர்னி

பணக்காரர்களை விட, பெர்னி சாண்டர்ஸுக்கு ஏழை மக்கள்தான் அதிகம் நிதி அளிக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இப்படி எல்லா நடப்பது அரிது. இதனால் டிரம்ப் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணம் உள்ளது. பெர்னி சாண்டர்ஸ் அப்படியே டிரம்ப் கொள்கைக்கு எதிரானவர். அவர் மிகவும் தாராளவாத கொள்கை கொண்டவர். டிரம்ப் செய்த பல தவறுகளை விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவர்.

யார் இவர்?

யார் இவர்?

மிக முக்கியமாக இடதுசாரி கொள்கை கொண்டவர். இதனால் பெர்னி சாண்டர்ஸ் இந்த தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் அவர் வெற்றிபெற கூட அதிக வாய்ப்புள்ளது. மிக எளிதாக பெர்னி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று இப்போதே கணிப்புகளில் தெரிவிக்கிறார்கள். இதுதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

English summary
2020 US Presidential Race: Bernie Sanders already became a hero in the campaign than Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X