நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆல் இஸ் வெல்", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே

34 வீரர்களுக்கு மூளையில் படுகாயம் என தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

நியூயார்க்: "யாருக்கும் ஒன்னும் பெரிசா பாதிப்பு இல்லை.. வெறும் தலைவலிதான்" என்று ஈரான் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து சொல்லி இருந்த நிலையில்.. இப்போது 34 அமெரிக்க படை வீரர்களுக்கு மூளைக்காயங்கள் இருக்கின்றன என்று ஷாக் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால்‌, ஈரானுக்கும்‌ அமெரிக்காவுக்கும்‌ இடையே மீண்டும்‌ போர்‌ மூளும்‌ அபாயம்‌ உருவானது.. இதன் காரணமாகவே வளைகுடா நாடுகளில்‌ பதற்றமும்‌ நிலவியது. இந்த சமயத்தில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டன.

கழுத்தில் இறங்கிய கத்தி.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண்.. ஷாக்கில் குன்னூர்! கழுத்தில் இறங்கிய கத்தி.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண்.. ஷாக்கில் குன்னூர்!

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

ஒரு டஜன் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன... அயின் அல் அஷாத் தளத்தில் உள்ள விமானப்படை முகாம்களில் இந்தத தாக்குதல் நடந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் உலக நாடுகளே பதற்றத்திற்கு ஆளாயின. அந்த சமயத்தில்தான் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து, ஆல் இஸ் வெல்.. ஈரான் தாக்குதலால் அமெரிக்காவுக்கு எந்த இழப்பும் இல்லை" என அதிபர் டிரம்ப் டிவீட் செய்திருந்தார்.

மூளைக்காயங்கள்

மூளைக்காயங்கள்

ஆனால் ஜனவரி 8-ம் தேதி நடந்த அந்த ஈரான் ஏவுகணை தாக்குதலால், 34 அமெரிக்க படை வீரர்களுக்கு மூளைக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். அதிர்ச்சிகரமான மூளைக் காயங்கள் ஏற்பட்டு கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்திருந்தது. பென்டகனின் அறிவிப்பும், டிரம்ப்பின் முந்தைய பேச்சும் நேருக்கு மாறாக உள்ளதால் அமெரிக்கர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தலைவலிதான்

தலைவலிதான்

ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் மூளையதிர்ச்சி அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்களாமே என்று டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப்பிடம் கேட்டனர். அதற்கு, "அவர்களுக்கு சாதாரண தலைவலிதான்... வேற சில பிரச்சனைகளும் இருக்கிறதாக கேள்விப்பட்டேன்" என்றார். ஆனால் நிலவரத்தை பென்டகன் பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் விளக்கமாக கூறியுள்ளார்.

மூளை காயங்கள்

மூளை காயங்கள்

"ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 8 அமெரிக்க வீரர்கள் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.. இவர்கள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவார்கள். இன்னும் 9 பேர் ஜெர்மனியில் சிகிச்சையில் உள்ளனர்.. அதேபோல, ஈராக்கில் 16 வீரர்களும், குவைத்தில் ஒருத்தரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அவர்கள் பாதிக்கப்பட்ட உடனேயே வெளிப்படையாகத் தெரியவில்லை... இப்போது காயமடைந்த 17 வீரர்கள் ஈராக்கில் பணிக்கு திரும்பிவிட்டனர்" என்றார்.

ஆக மொத்தத்தில் ஈரான் போட்ட போட்டில் அமெரிக்க ராணுவம் மூளை குழம்பிப் போயிருப்பதாகவே தெரிகிறது.

English summary
34 us troops diagnosed with traumatic brain injury after missile by Iran Strike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X