நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மர்மமான துப்பாக்கி சூடு.. கால்பந்து பார்த்துக்கொண்டு இருந்த 4 பேர் பலி.. அமெரிக்காவில் பகீர்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மர்மமாக நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பல உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வர தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிபர் டிரம்ப் இந்த கோரிக்கைகளுக்கு செவி மடுக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அங்கு ஆசிரியர்கள் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்க முடியும் என்றும் கூட அவர் கூறியுள்ளார்.

நடந்தது

நடந்தது

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மர்மமாக நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பிரென்ஸோ பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடந்துள்ளது.

பலர்

பலர்

பிரென்ஸோ நகரில் ஒரு வீட்டில் கால்பந்து போட்டியை காணும் விழா ஒன்று நடந்துள்ளது. வீட்டிற்கு பின்புறமும் பெரிய திரையில் 35 பேர் ஒன்றாக கால்பந்து போட்டியை பார்த்து இருக்கிறார்கள். அப்போதுதான் அங்கு மர்மமான முறையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

பலியானார்கள்

பலியானார்கள்

அமெரிக்காவில் வாழும் ஆசியாவை சேர்ந்தவர்கள் அவர்கள். சரியாக அவர்களை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. அதனால் இந்த தாக்குதல் இன ரீதியான தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். போலீஸ் இதுகுறித்து விசாரித்து வருகிறது.

 மிக மோசம்

மிக மோசம்

இந்த தாக்குதலில் மொத்தம் ஆசிய அமெரிக்கர்கள் 4 பேர் பலியானார்கள். குழந்தைகள் யாரும் பலியாகவில்லை. மொத்தம் 10 பேர் இதில் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த தாக்குதல் எப்படி நடந்தது. இதை யார் செய்தது? இந்த துப்பாக்கி சூட்டிற்கு பின் இருப்பது ஒருவரா? அல்லது பலரா என்று தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை சோதித்து வருகிறார்கள்.

English summary
4 dead and 6 injured in a shooting in California USA during a watch party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X