5ஜி தொழில்நுட்பம் விமான சேவையை பாதிக்கிறதா? அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பு குரல்கள்.. பரபர பின்னணி
நியூயார்க்: அமெரிக்காவில் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய 5ஜி தொழில்நுட்பம் காரணமாக அந்நாட்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றன. அமெரிக்காவில் உடனடியாக 5ஜி தொழில்நுட்ப விதிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன... அமெரிக்காவில் ஏன் 5ஜி தொழில்நுட்பம் சிக்கல் ஆனது என்று பார்க்கலாம்.
உலகம் முழுக்க பல நாடுகளில் 5ஜி தொழிநுட்பம் பல காரணங்களுக்காக சர்ச்சையாகி வருகிறது. சில நாடுகளில் பறவைகள் இதனால் அதிகம் சாவதாக புகார் உள்ளது. சில நாடுகளில் 5ஜி மூலம் கொரோனா பரவுகிறது என்றும் புகார் உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை.
மாறாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் விமான பயணம் பாதிக்கப்படுவதாக ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக பெரிய சிக்கல் வரலாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது.
சென்னை உட்பட 13 சிட்டிகள்.. அடுத்த ஆண்டு வருகிறது 5ஜி செல்போன் சேவை.. 4ஜியை விட என்ன வசதிகள்?

என்ன நடந்தது?
அமெரிக்காவில் கடந்த 2021ல் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இது அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பம் 3.7-3.98 GHz என்ற அளவில் ஏலம் விடுக்கப்பட்டு இருக்கிறது. சி பேண்டில் 3.7-3.98 GHz ரேஞ்ச் அளவில் இந்த 5ஜி தொழில்நுட்பம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதை 80 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டுள்ளனர். இந்த 5ஜி தொழில்நுட்பம் ரேஞ்ச் அளவுதான் அங்கு விமான நிறுவனங்களுக்கு சிக்கலாகி மாறியுள்ளது.

என்ன சிக்கல்?
அமெரிக்காவின் விமான போக்குவரத்து துறை இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. அதன்படி விமானங்களின் அல்டி மீட்டர் 4.2-4.4 GHz ரேஞ்சில் இயங்குகிறது. அதாவது இந்த அல்டிமீட்டர்தான் விமானத்தின் உயரத்தை கணிக்க உதவும். விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்று கண்டுபிடிக்க இதுதானா உதவும். இதை வைத்தே விமானத்திற்கு உள்ளே பிரஷரை கட்டுப்படுத்த முடியும். எப்போது தரையிறங்கலாம், எப்போது விமானத்தின் வேகத்தை குறைக்கலாம், அதிகரிக்கலாம் என்பதை அல்டி மீட்டர் காட்டும் உயரத்தின் உதவியுடன்தான் முடிவு செய்ய முடியும்.

பிரச்சனை இதுதான்
இப்போது அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் 3.7-3.98 GHz ரேஞ்ச் அளவில் உள்ளது. இது விமானங்கள் இயங்க கூடிய அல்டி மீட்டர் அளவிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இதனால் விமானத்தின் அல்டி மீட்டர்கள் குழம்பும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கும் போது 5ஜி சிக்னல் காரணமாக இன்டெர்ப்பியர் ஏற்பட்டு பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

40 விமான நிலையங்கள்
அமெரிக்காவில் 40 விமான நிலையங்களில் இதனால் போக்குவரத்து பாதிக்கப்படபோகிறது. 4 சதவிகித விமானங்கள் இதனால் தாமதம் ஆகும் அபாயம் உள்ளது. பல லட்சம் பயணிகள் இதனால் பாதிக்கப்பட போகிறார்கள். அல்டி மீட்டர்கள் இனி பெரும்பாலான சமயங்களில் பலன் அளிக்கிறது. நேரடியாக விமானிகள் கண்ணாடி வழியே பார்த்து உயரத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இனி ஏற்படும். 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிக பேண்ட் வித் அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பம்
அதிக பேண்ட் எடுப்பது தவறு இல்லை. ஆனால் இது எங்களின் விமான போக்குவரத்தை பாதிக்கிறது என்று விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் 5ஜி இருக்கும் மற்ற நாடுகளில் பேண்ட் வித் மிக மிக குறைவாகவே இருக்கிறது. இதனால் அங்கு 5ஜி தொழில்நுட்பம் என்பது விமான சிக்னலை பாதிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் அதிவேகமான 5ஜி தொழில்நுட்பம் காரணமாக அங்கு விமான நிலையங்கள் பாதிக்கப்படுகின்றன என்று அந்நாட்டு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.