நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த துப்பாக்கி சூடு.. 4 மணி நேரம் நடந்த சண்டை.. 6 பேர் பலி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஆகி வருகிறது. அந்நாடு முழுக்க இருக்கும் மக்கள் பலர் தங்களுக்கு என்று துப்பாக்கி வைத்து இருக்கிறார்கள். இதனால் அங்கு அடிக்கடி துப்பாக்கி சுடும் அசம்பாவிதம் நடக்கிறது.

இதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கடுமையாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை பெரிய அளவில் காதில் போட்டுக்கொள்வது கிடையாது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த நிலையில் இன்று அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு இரண்டங்களில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இரண்டு பேர் ஜீப்பில் வந்து நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கோஷர் மார்க்கெட் அருகே இருக்கும் சமாதியில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

போலீசார் பலி

போலீசார் பலி

அங்கிருந்த போலீசாரை சுட்டுவிட்டு அருகே இருந்த கோஷர் மார்க்கெட் உள்ளே சென்று உள்ளனர். அங்கிருந்த மக்கள் மீது இவர்கள் சரமாரியாக சுட்டனர். உள்ளே இருந்த போலீசார் இவர்களை திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டை 4 மணி நேரம் நடந்தது.

எத்தனை பலி

எத்தனை பலி

இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 6 பேர் பலியானார்கள். இதில் போலீசார் ஒருவர் அடக்கம். குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரும் இதில் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் என்ன

இதில் காயம் அடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த தாக்குதல் ஏன் நடந்தது என்ன காரணம் என்ற விவரம் வெளியாகவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள் .

English summary
6 dead and 2 injured in a shooting in New Jersey the USA today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X