தலையை துளைத்த "குண்டு".. சாலையில் நடந்து சென்ற 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்..!
நியூயார்க்: துப்பாக்கி குண்டு ஒன்று குறி தவறி, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்தது.. இதில் சிறுமி சுருண்டு விழுந்து இறந்துவிட்டாள்..!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்த பயங்கரம் நடந்துள்ளது.. இங்குள்ள மெடிக்கல் செக்கிங் அலுவலகம் எதிரே 8 வயது சிறுமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள்..
அவளுடன் பாதுகாவலரும் உடன் வந்திருந்தார்.. அப்போது சாலையோரம் இருக்கும் ஒரு கடையில் ஏதோ தகராறு நடந்து கொண்டிருந்தது.. அந்த கடையில் இருந்து ஒரு இளைஞர் சத்தம் போட்டுக் கொண்டே வெளியே வந்தார்..
அறிவியல் அதிசயம்: கல்லீரல் கொடுத்து சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி

தகராறு
அவரை திடீரென யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.. அந்த நபர் யாரென்று தெரியவில்லை.. ஆனால், அவரது துப்பாக்கி குறி, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது படாமல், சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியின் தலையில் வந்து பாய்ந்துள்ளது.. இதில் சிறுமி அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாள்.. இதை பார்த்த அங்கிருந்து பாதுகாப்பு போலீசார் பதறிப்போய் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.. ஆம்புலன்ஸில் அவளை மருத்துவமனைக்கும் எடுத்து சென்றனர்..

துப்பாக்கி குண்டு
ஆனால், வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டாள்... முதல் குறி தவறியதால், அந்த இளைஞரை அடையாளம் தெரியாத அதே நபர் மறுபடியும் துப்பாக்கியால் சுட்டார்.. அந்த குண்டு, இளைஞரின் முதுகில் துளைத்து கொண்டு போனது.. இவரையும் போலீசார் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு போய் சேர்த்தனர்.. அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது..

நம்பிக்கை
இந்த துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடிவிட்டார். இதுவரை அவர் கைதாகவில்லை என்று தெரிகிறது.. எனினும் அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அவரை கைது செய்யாமல் விடமாட்டோம் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 8 வயது சிறுமியின் பெயர் மெலிசா.. அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தரப்பட்டுள்ளது..

ட்வீட்
மெலிசாவின் பரிதாபமான இந்த கொலை எங்கள் நகரத்தையே உலுக்கி விட்டது என்றும், ஒரு குழந்தையின் உயிர் பறிபோகும்போது ஆறுதல் சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை, அந்த குடும்பத்தின் துயரத்தை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை போலீஸ் உயரதிகாரி ஒருவர் துக்கத்துடன் ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.