நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென்று தாக்கிய பனிப்புயல்.. அமெரிக்காவில் விமான விபத்து.. 9 பேர் பலியான பரிதாபம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் சவுத் டகோடா மாகாணம் அதிக அளவில் பணக்கார மக்கள் வசி க்கும் பகுதியாகும். இங்கு தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு கடந்த மூன்று நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது.

இதனால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். விமானங்கள் பறக்கும் போது கவனமாக செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

என்ன விபத்து

என்ன விபத்து

இந்த நிலையில் அமெரிக்காவின் சவுத் டகோடாவில் இன்று அதிகாலை விமானம் விபத்து ஏற்பட்டது. சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட சில நிமிடங்களில் பாறைகளில் மோதி கீழே விழுந்து வெடித்து சிதறியது. சாம்பர்லின் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

ஏன் விமானம்

ஏன் விமானம்

12 பேர் சென்ற சிறிய ரக விமானம் விபத்திற்கு உள்ளானது. தேங்க்ஸ் கிவ்விங் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் விழாவை கொண்டாட இவர்கள் ஒரே விமானத்தில் சென்றுள்ளனர் .இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

என்ன தீவிரம்

என்ன தீவிரம்

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளும் , பைலட்டும் பலியாகிவிட்டனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரின் உடலை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

அங்கு கடந்த மூன்று நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. இந்த புயல் அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம். இதனால் விமானத்தின் பாகங்கள் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கிறது.

English summary
9 people including 2 children died in a plane crash in South Dakota in United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X