நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்பின் "ஏர் போர்ஸ் ஒன்'' விமானத்தை நோக்கி.. வேகமாக வந்த ராட்சச டிரோன்.. நடுவானில் பரபர சம்பவம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி டிரோன் விமானம் ஒன்று வேகமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப்பின் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை மோதுவது போல இந்த விமானம் வந்தது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட அதிபர்கள், தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் விமானம் ஏர் போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது. உலகில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட விமானங்களில் இதுவும் ஒன்றாகும்.

போயிங் நிறுவனத்தின் 737 விமானத்தை மாற்றி இந்த விமானத்தை உருவாக்கி உள்ளனர். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து போயிங் விமானத்தை ஏர் போர்ஸ் ஒன் விமானமாக மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள்.

H-1B visa : இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அளித்த உறுதி H-1B visa : இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அளித்த உறுதி

 டிரோன் வந்தது

டிரோன் வந்தது

இந்த நிலையில் இத்தனை பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி டிரோன் ஒன்று வந்துள்ளது. ஆள் இல்லாத பெரிய டிரோன் ஒன்று ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை தாக்குவது போல வேகமாக வந்து இருக்கிறது. சரியாக அமெரிக்க அதிபர், இந்த விமானம் உள்ளே இருந்த போது, டிரோன் தாக்குவது போல வந்துள்ளது.

எப்போது நடந்தது

எப்போது நடந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அதிபர் டிரம்ப் மட்டும் இல்லை. அவருடன் இன்னும் தேர்தல் பிரச்சார நிர்வாகிகள் பலரும் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் விமானத்தில் செல்லும் போதுதான் அந்த டிரோன் வேகமாக அருகே வந்துள்ளது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் உள்ளே இருந்தவர்கள் இந்த டிரோனை பார்த்து உள்ளனர்.

எந்த பக்கம் சென்றது

எந்த பக்கம் சென்றது

சரியாக இந்த டிரோன், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் இடது பக்கத்தில் இருக்கும் இறக்கைக்கு அருகே வந்து சென்று இருக்கிறது. இடது பக்க எஞ்சின் அருகே இந்த டிரோன் வந்துள்ளது. ஆனால் ஏர் போர்ஸ் ஒன் விமானி உடனே சுதாரித்தார். இதனால் விமானம் கடைசி நேரத்தில் தனது பாதையை மாற்றியது. இதனால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

பெரிய விபத்து

பெரிய விபத்து

பொதுவாக டிரோன் விமானங்கள் மோதினால் பெரிய விமானங்கள் விபத்துக்கு உள்ளாகாது. ஆனால் பறவை மோதுவதை விட இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதோடு சில சமயம் எஞ்சின் உள்ளே டிரோன் விழுந்தால், அது மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தும். அந்த மாதிரி சமயங்களில் விமானம் விபத்துக்கு உள்ளாக கூட வாய்ப்புகள் உள்ளது.

Recommended Video

    விமானி எடுத்த தவறான முடிவுதான் விமான விபத்துக்கு காரணமா? | Oneindia Tamil
    அதிக உயரம்

    அதிக உயரம்

    அமெரிக்காவில் இதனால் 122 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் தனியார் டிரோன்கள் பறக்க கூடாது என்று விதிமுறை உள்ளது. இப்படி பறந்தால் அந்த தனியார் நிறுவனம் அல்லது நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . இந்தநிலையில் டிரம்ப் விமானம் அருகே சென்ற அந்த டிரோன் இந்த லிமிட்டை தாண்டி மேலே பறந்து இருக்கிறது. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    A drone very close to Trump's Air Force One planes: Special force investigates the Sunday incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X