நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அழிவின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை!

பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் ஒன்று வந்து கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    NASA 99942 Apophis | பூமியை நோக்கி வரும் விண்கல்: நாசா எச்சரிக்கை!

    நியூயார்க்: பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு தற்போது தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

    பூமியை அவ்வப்போது விண்கற்கள் கடந்து செல்வது வழக்கம். அதிலும் சில விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்து சென்றது கூட நிகழ்ந்து உள்ளது.

    அட பூமியில் விளையாடிக் கொண்டு இருந்த டைனோசர்கள் இறந்தது கூட விண்கற்கள் திடீர் என்று ஒருநாள் தொபக்கடீர் என்று பூமியில் மோதியதால்தான். அப்படிதான் இன்னும் சில வருடங்களில் பூமியை நோக்கி பெரிய விண்கல் ஒன்று வர உள்ளது.

    என்ன பெயர்

    என்ன பெயர்

    அமெரிக்காவின் நாசா இந்த விண்கல்லுக்கு அழிவுகளின் கடவுள் என்று பெயர் வைத்து இருக்கிறது. ஆனால் இதன் அறிவியல் பெயர் 99942 Apophis என்பதாகும். இது தற்போது பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. இதன் அளவு 340 மீட்டர்கள் ஆகும்.

    எப்படி கடக்கும்

    எப்படி கடக்கும்

    இது பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். பூமியில் இருந்து வெறும் 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் இது கடந்து செல்லும். பெரும்பாலான சாட்டிலைட்டுகளே 36000 கிலோ மீட்டர் தொலைவில்தான் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நெருங்கி வந்ததிலேயே இதுதான் மிகப்பெரிய விண்கல் ஆகும்.

    சக்தி

    சக்தி

    இது பூமியில் மோதினால் மொத்தமாக பூமியை அழிக்கும், அந்த அளவிற்கு இது வலுவானது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் இது பூமி வட்டப்பாதையில் சுற்றும் அனைத்து சாட்டிலைட்டுகளை அழிப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    வரும்

    வரும்

    இது தற்போது 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சூரிய குடும்பத்தை நெருங்கிய பின் ஈர்ப்பு விசை காரணமாக இது இன்னும் வேகமாக செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் எப்போது வேண்டுமானாலும் இது பூமியை நெருங்கலாம் .

    வருடம்

    வருடம்

    அதிகபட்சம் 2029க்குள் இது பூமியை கடந்து விடும். சமயங்களில் ஈர்ப்பு விசையால் அதற்கு முன்பு கூட பூமியை கடக்க வாய்ப்புள்ளது. இது பூமியை கடக்கும் போது என்னவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    A large-sized asteroid named God of Chaos will cross the earth in a few years says NASA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X