நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி மாதிரியே நீங்களும் ஆகலாம் ‘சிட்டி’.. ரூ. 91 லட்சம் பரிசு வேற தர்றாங்களாம்!

Google Oneindia Tamil News

நியூயார்க் : இயந்திர மனிதனுக்கு உங்கள் முகத்தைப் போலவே தோற்றத்தை தர சம்மதித்தால், 91 லட்ச ரூபாய் பரிசாக தரப்படும் என தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ரோபோ உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால் இயந்திர மனிதர்களுக்கு மனிதர்களின் முகம் போன்ற தோற்றம் இருந்தால், அவை இன்னமும் மனிதர்களிடம் நெருக்கமாக முடியும்.

a tech company will pay you rs 91 lakh to put your face on its robots

சினிமாக்களில் இது போன்ற காட்சிகளை ஏராளமாக நாம் பார்த்திருக்கிறோம். எந்திரன், 2.0 போன்றவற்றில் ஹீரோ ரஜினியை தூக்கி சாப்பிட்டது சிட்டி கேரக்டர்.

தற்போது இது போலவே பேர் வெளியிட விரும்பாத தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரிக்கவுள்ள ஆயிரம் இயந்திர மனிதர்களுக்கு முகம் தேடும் பணியைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளம்பரம் தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த விளம்பரத்தில், 'இயந்திர மனிதனுக்கு, உங்கள் முகத்தை போலவே தோற்றத்தை தர அனுமதி அளித்தால், ஒரு லட்சம் பவுண்ட் பரிசு தரப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 91 லட்சம் ரூபாய் ஆகும். முதியவர்களுக்கு உதவி செய்யும் வகையில் அந்த இயந்திர மனிதர்கள் உருவாக்கப்படுவதால், நட்புடன் கூடிய முக அமைப்பை அந்நிறுவனம் தேடி வருகிறது.

ஆனால் இந்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முகம் தான் அளித்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் சமூகவலைதளப் பக்கங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

English summary
A new tech company is willing to pay Rs 91 lakh to put your face on thousands of its robots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X