நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பைடர் மேன் முதல் அயர்ன் மேன் வரை.. தனியாளாக உலகை மாற்றிய ஸ்டான் லீ.. போய் வாருங்கள் ஹீரோ!

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நேற்று நள்ளிரவில் காலமானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்-வீடியோ

    நியூயார்க்: ஸ்டான் லீ மார்வெல் நிறுவனத்தை செதுக்கி காமிக் உலகத்தை மொத்தமாக மாற்றிய ஜாம்பவான் ஆவார்.

    காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நள்ளிரவில் காலமானார். மார்வெல் நிறுவனத்தின் காமிக் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் இவர்தான்.

    உலகில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் பிடித்தமான தாத்தா என்றால் மிகவும் எளிதாக ஸ்டான் லீ என்று சொல்லிவிடலாம். மார்வெல் காமிக் ரசிகர்களும், டிசி காமிக் ரசிகர்களும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொண்டால் கூட, ஸ்டான் லீ என்று வரும் போது, ஒற்றுமையாக அவரை ரசிப்பார்கள்.

    உலகம் முழுக்க 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றிய காமிக் ஹீரோ ஸ்டான் லீ. இனி மார்வெல் படங்களில் அவரை பார்க்க முடியாது என்பதை அறிந்து உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

    ஏழை குடும்பம்

    ஏழை குடும்பம்

    1922ல் பிறந்த ஸ்டான் லீ, தன்னுடைய பதின் வயதை பெரிய அளவில் வெறுத்ததாக கூறியுள்ளார். கையில் காசு இல்லை, அப்பாவோ வார வாரம் வேலை மாறுகிறார். நிறைய கடன் சொந்த வீடு கிடையாது. சரியாக படிப்பும் கிடையாது என்று ஸ்டான் லீ வாழ்க்கையில் முதல் 20 வருடங்கள் மிக மோசமாகவே இருந்தது. சிறிய அறை உள்ள வீட்டில் இவரும் இவர் சகோதரரும் தூங்க, அவரின் பெற்றோர் வெளியே சோபாவில் தூங்கும் அளவிற்கு வறுமை வாட்டி இருக்கிறது.

    முதல் நல்ல வேலை

    முதல் நல்ல வேலை

    நிறைய வேலைகளை மாற்றி மாற்றி பார்த்த அவர், டைம்லி காமிக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின் எல்லாம் மாறியது. அங்கு காமிக் கதாபாத்திரங்களை எழுதும் வேலைக்கு சேர்ந்தார் ஸ்டான் லீ. எனக்கு அது வேலையாக தெரியவில்லை. அதுதான் என்னுடைய வாழக்கை. அதை நான் தினமும் பின்பற்றினேன். அது எனக்கு பிடித்து இருந்தது. அதனால் செய்தேன். மத்ததெல்லாம் தானாக நடந்தது என்று ஒரு பேட்டியில் கூட ஸ்டான் லீ குறிப்பிட்டு இருந்தார்.

    முதல் ஹீரோ உருவானார்

    முதல் ஹீரோ உருவானார்

    அதன்பின் 1960களில் டைம்லி காமிக்ஸ் நிறுவனம் மார்வெல் நிறுவனமாக மாறுகிறது. அங்குதான் சினிமா வரலாறும் மாற்றி எழுதப்பட்டது. சிறிய சிறிய மொக்கையான காமிக் பாத்திரங்களை எழுதி வந்த ஸ்டான் லீ, புதிய முயற்சியாக கேப்டன் அமெரிக்கா என்ற காமிக் பாத்திரத்தை உருவாக்கினார். இப்போது அவெஞ்சர்களின் தலைமகனாக கேப்டன் அமெரிக்கா வலம் வருகிறார்.

    பென்டஸ்டிக் போர் உருவாக்கம்

    பென்டஸ்டிக் போர் உருவாக்கம்

    ஆனால் கேப்டன் அமெரிக்காவை விட, மார்வெல் நிறுவனத்தை உலகறிய செய்தது பென்டஸ்டிக் போர் (fantastic 4)என்றுதான் சொல்ல வேண்டும். 1950களில் காமிக் உலகில் டிசி நிறுவனம்தான் பெரிய கையாக இருந்தது. ஆனால் மார்வெல் பென்டஸ்டிக் போர் காமிக் கதைகள் மூலம் அதை உடைத்தது. சூப்பர் ஹீரோக்களை மனிதர்களை போலவே நிறைய குறைகள் கொண்ட எதிர்வீட்டு பையன் போல காட்டியது பெரிய வைரல் ஆனது. அதன்பின் மார்வெல் வரலாறு மாறியது.

    எத்தனை கதைகள்

    எத்தனை கதைகள்

    ஜாக் கிர்பி, ஸ்டிவ் டிட்கோ உள்ளிட்ட மார்வெல் ஜாம்பவான்களுடன் ஸ்டான் லீ உருவாக்கிய அடுத்தடுத்த மார்வெல் கதைகள் எல்லாம் பெரிய ஹிட் அடித்தது. ஹல்க், தோர், அயர்ன் மேன், எக்ஸ் மேன், டேர் டெவில், ஸ்பைடர் மேன் என உருவாக்கிய ஹீரோக்கள் எல்லோரும் மக்களை பெரிய அளவில் கவர்ந்தனர். மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மார்வெல் காமிக் புத்தகங்களை வாங்கி குவித்தனர்.

    பிளாக் பந்தர் கதாபாத்திரம்

    பிளாக் பந்தர் கதாபாத்திரம்

    இதில் கவனிக்க வேண்டிய புரட்சி ஒன்றும் நடந்தது. 1966ல் உருவாக்கப்பட்ட பிளாக் பந்தர் கதாபாத்திரம் முதலில் பென்டஸ்டிக் போரில் ஒரு பாத்திரமாக வந்து பின் தனி ஹீரோவானது. மார்வெலின் இரண்டாவது பெரிய பலம் வாய்ந்து ஹீரோ இவர்தான். இதில் என்ன சிறப்பு என்றால் கருப்பின மக்கள் அடிமையாக இருந்த, மதிக்கப்படாமல் இருந்த சமயத்தில் கறுப்பின தலைவன் டிசெல்லவை முன்னிலைப்படுத்தி, கருப்பின மக்களை சிறந்த சக்தி படைத்தவர்களாக பிளாக் பந்தர் காட்டியது பெரிய வரவேற்பை பெற்றது. சென்ற வருடம் வெளியான பிளாக் பந்தர் படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

    தொட்டதெல்லாம்

    தொட்டதெல்லாம்

    80 களின் இறுதியில் ஹாலிவுட்டிற்கு வந்த மார்வெல் நிலைத்து நிற்க கொஞ்ச நேரம் ஆனது. மார்வெலின் ஆரம்ப கால காமிக் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. டிசி காமிக் உலகை ஆண்டது போல காமிக் சினிமா உலகையும் ஆண்டு கொண்டு இருந்தது. 90 களின் இறுதி வரை மார்வெல் பெரிய அளவில் முத்திரை பதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

    வந்தனர்

    வந்தனர்

    அதன்பின் 2000 எக்ஸ் மேன் தொடர் படமாக வந்ததுதான் மிச்சம் ஹாலிவுட்டில் மட்டுமில்லாமல் மொத்த சினிமா உலகிலேயே மார்வெல் பெரிய முத்திரை பதித்தது. அதன்பின் 2002ல் ஸ்பைடர் மேன் படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. அதன்பின் நடந்தது எல்லாம் காமிக் ரசிகர்களின் பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக மார்வெல் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறியது.

    எத்தனை படங்கள்

    எத்தனை படங்கள்

    வெற்றிகள் மூலம் ஸ்டான் லீ ஹாலிவுட்டிலும் பெரிய அளவில் தடம் பதித்தார். டிசி படங்களை ஓரம் கட்ட வைத்து, மார்வெலை உலகின் நம்பர் ஒன் காமிக் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். ஸ்பைடர் மேன் டிரையாலஜி, அயர்ன் மேன் டிரையாலஜி, அவென்ஜர்ஸ் பாகங்கள், பென்டாஸ்டிக் 4, எக்ஸ் மேன் பாகங்கள், டெட்பூல் 1 /2 , அன்ட் மேன் என்று இதுவரை தோல்வியே சந்திக்காத பிதாமகன் இவர்.

    படங்களில் தோன்றுவார்

    படங்களில் தோன்றுவார்

    மார்வெல் நிறுவனத்தின் சேர்மேன், தலைமை எழுத்தாளர், தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்து வந்த அவர், வயது முதிர்வால் பொறுப்புகளில் இருந்து விலகினார். ஆனால் தொடர்ந்து மார்வெல் படங்களில் நடித்து வந்தார். எல்லா படங்களிலும் ஒரு சிறிய கதாபாத்திரமாக வந்து போனார். போட்டியாளரான டிசியை கிண்டலாகவும் அன்பாகவும் பேசி வைரல் ஆனார்.

    அவர்தான்

    அவர்தான்

    ஸ்பைடர் மேன் படத்தில் அவர் தோன்றும் போது இப்படி ஒரு வசனம் சொல்வார் ''ஒரு தனி மனிதனால் உலகை மாற்ற முடியும் என்று சொல்வார்கள்.. எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள்'' என்று ஹீரோவை பார்த்து சொல்லிவிட்டு நகர்வார். அப்படித்தான், ஸ்டான் லீ பல குழந்தைகளின், இளைஞர்களின் திரை ரசனையை வாழ்க்கையை மாற்றினார். 95 வருடம் மிக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு காமிக் உலகிற்கு சென்றுவிட்டார் அந்த சூப்பர் ஹீரோ!

    English summary
    A tribute to Marvel Super Hero creator Stan Lee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X