நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹிட்லரிடமே தப்பியவர்.. சர்வதேச அரங்கில் மோடிக்கு எதிராக எழுந்த குரல்.. கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ்!

இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சி தேசியவாதத்தை மிக தீவிரமாக பின்பற்றி வருகிறது, பிரதமர் மோடி ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார் என்று கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் உலக பொருளாதார மாநாட்டில்

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சி தேசியவாதத்தை மிக தீவிரமாக பின்பற்றி வருகிறது, பிரதமர் மோடி ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார் என்று கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. உலக வர்த்தக நிறுவனம் சார்பாக நடந்து வருகிறது. இந்த மாநாடு உலக அளவில் பொருளாதாரத்திலும், நாடுகளுக்கு இடையிலான உறவிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உலக வர்த்தகத்தில் அதிமுக முக்கியத்துவம், சலுகைகள் தரப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தற்போது இந்தியாவை உலகின் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் விமர்சித்துள்ளார் .

6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா! மகுடம் சூடிய அமித் ஷா!6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா! மகுடம் சூடிய அமித் ஷா!

ஜார்ஜ் சோரோஸ் என்ன சொன்னார்

ஜார்ஜ் சோரோஸ் என்ன சொன்னார்

பிரதமர் மோடி குறித்து குறிப்பிட்ட ஜார்ஜ் சோரோஸ் , இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அங்கு தேசிய வாதம் என்ற பெயரில் அரசு மிக தீவிரமாக ஆட்சியை நடத்திவருகிறது. இந்தியா மிக மோசமான காலத்தில் இருக்கிறது. யாரும் எதிர்பார்க்க ஒரு நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் அச்சம் தருவதாக இருக்கிறது.

அரசு மோசம்

அரசு மோசம்

பிரதமர் மோடி மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அந்த ஜனநாயகத்தை மதிக்கவில்லை. மாறாக அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் இயற்றி வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராக விதமாக என்ஆர்சி, சிஏஏ ஆகிய சட்டங்களை அவர் கொண்டு வருகிறார். காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டார். அங்கு இப்போதும் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. என்று ஜார்ஜ் சோரோஸ் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் எப்படி

டிரம்ப் எப்படி

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பேசிய ஜார்ஜ் சோரோஸ், அமெரிக்காவில் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இதற்கு டிரம்ப் மிக முக்கிய காரணம். உலகமே தன்னை சுற்றித் தான் சுழல்கிறது என்று டிரம்ப் நினைத்துக் கொண்டு இருக்கிறார். டிரம்ப் சரியான சுயநலவாதியாக இருக்கிறார். அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை டிரம்ப் மதிக்கவில்லை. தன்னுடைய அதிகாரத்தை மீறி டிரம்ப் நடந்து வருகிறார், என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் ஜார்ஜ் சோரோஸ்

யார் ஜார்ஜ் சோரோஸ்

ஹங்கேரி அமெரிக்கனான ஜார்ஜ் சோரோஸ், உலகில் மதிக்கத்த கோடிஸ்வரர்களில் ஒருவர். பல நாடுகளில் பொருளாதார சீரழிவையே இவர் சரியாக கணித்தவர். ஹங்கேரியில், ஹிட்லரின் நாசி வெறி தாக்குதலின் போது தப்பித்து அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறினார். இதனால் இவருக்கு அதீத அரசியல் அறிவும் உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர் ஆகும். அவர் இதுவரை நன்கொடையை மட்டுமே 32 பில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.

English summary
A very big attack on PM Modi: Billionaire George Soros slams in Davos meet today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X