நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கவர்ச்சியான தலைவர்".. டைம்சின் செல்வாக்கு மிக்க 100 பேர் லிஸ்டில் தாலிபான் மாஸ்டர்மைண்ட்.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்; டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை எல்லா வருடமும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம்ஸ் வெளியிடும். சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் இதில் இடம்பெற்று இருப்பார்கள். எல்லா வருடமும் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்படும். சினிமா, மக்கள் பணி, அரசியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இருந்து முக்கிய நபர்களை தேர்வு செய்வார்கள்.

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்

இந்த பட்டியலில் இடம்பெறும் நபர்கள் உலகம் முழுக்க பிரபலமாக இருப்பார்கள். அதேபோல் அவர்கள் இருக்கும் துறையில் முக்கிய சாதனைகளை செய்து இருப்பார்கள்.

சாதனை

சாதனை

இந்த வருடம் டைம்ஸ் இதேபோல் 100 பேரின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் இருந்து பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் பிடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யாவில் பல முறை கொலை தாக்குதலுக்கு உள்ளன எதிர்க்கட்சிகளின் தலைவரான அலெக்சி நாவல்னி போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற பாலிவுட் பிரபலங்கள் இதில் இந்த முறை இடம்பெறவில்லை.

சீரம்

சீரம்

பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் ஆகியோருடன் இந்த பட்டியல் தொடங்கி உள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவரான அடர் பொன்வாலா இதில் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்றால் அது தாலிபானின் முக்கிய தலைவர் அப்துல் முல்லா கானி பராதாரின் தேர்வுதான். ஆம் இவரும் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

யார்?

யார்?

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் லிஸ்டில் இவர் இடம்பெற்று இருக்கிறார். அப்துல் முல்லா கானி பாராதார் நாட்டின் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். முல்லா கானி பாராதார் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இவர்தான் தோஹாவில் தாலிபான் அமெரிக்கா ஒப்பந்தம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். தாலிபான் வெற்றிக்கும் முக்கியமான காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

    America-வுக்கு எதிராக Taliban-ஐ வைத்து Pakistan போடும் திட்டம்
     ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    இவர் தொடர்பாக டைம்ஸ் இதழில் எழுதப்பட்டுள்ள அந்த சிறப்பு கட்டுரையில், அப்துல் கானி தாலிபான் இயக்கம் தொடங்கப்பட்டதின் நிறுவன தலைவர்களில் ஒருவர். இவர் கவர்ச்சியான இராணுவத் தலைவர் மற்றும் ஆழ்ந்த இறை பக்தியுள்ள நபர். இவரின் பேச்சுவார்த்தை காரணமாகவே தாலிபான் வெற்றி உறுதியானது. தாலிபான்களின் முக்கியமான முடிவுகளை இவர்தான் எடுத்தது. காபூலில் பெரிய மோதல் இன்று தாலிபான் வெல்லவும், சீனா, பாகிஸ்தானுடன் நல்ல உறவை கடைபிடிக்கவும் அப்துல் கானிதான் காரணமாக அமைந்தார்.

    கவர்ச்சி

    கவர்ச்சி

    ஆப்கானிஸ்தானின் எதிர்காலமாக இவர் திகழ்கிறார். தற்போது துணை பிரதமராக இருக்கிறார். இவர் மிகவும் ரகசியமாக வாழ கூடியவர். பெரிதாக பேட்டி கொடுக்க மாட்டார். பொதுவில் தோன்ற மாட்டார். இவர் கொஞ்சம் மாடர்ன் கருத்து கொண்டவர். மேற்கு உலக நாடுகளுடன் தாலிபான் இணைய வேண்டும் என்றால் அதற்கு இவர்தான் கண்டிப்பாக பாலமாக இருப்பார். ஆப்கானிஸ்தானுக்கு தேவையான நிதிகளை பெற்றுத்தர இவர் உதவுவார் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Taliban leader and Afghan Deputy PM Abdul Ghani Baradar gets his name in TIMES influential 100 list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X