நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி!

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து 34 ஆண்டுகளுக்கு பிறகு ஐநா ஆலோசனை நடத்த இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    UN on Kashmir issue | காஷ்மீர் பிரச்சனையில் ஐநாவின் ரகசிய ஆலோசனை

    நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து 34 ஆண்டுகளுக்கு பிறகு ஐநா ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில்தான் காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.

    விசாரணை

    விசாரணை

    சீனாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த விசாரணை நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் ரகசியமாக நடக்க உள்ளது. இது தொடர்பான அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவர்களாக வெளியிடும் வரை எந்த விதமான தகவலும் வெளியே வராது. இந்தியாவிற்கு எதிராக இந்த ஆலோசனையில் என்ன விவாதித்தாலும் வெளியே தெரியாது.

    ஐந்து நாடுகள்

    ஐந்து நாடுகள்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. அதேபோல் காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான்தான் முதலில் புகார் அளித்தது என்பதால் அவர்களின் புகார் கடிதம் குறித்தும் இதில் விவாதிக்கப்படும். இந்த ஆலோசனையில் சீனா, பிரான்ஸ், பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.

    மோசம்

    மோசம்

    ஆம் சீனா, பிரான்ஸ், பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இந்த ஆலோசனையில் பேசலாம். அதே சமயம் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு பெரிய அழுத்தம் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    எப்படி

    எப்படி

    1965ல்தான் கடைசியாக ஜம்மு காஷ்மீர் விஷயம் ஐநாவில் விவாதம் செய்யப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ஐநாவில் விவாதம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா இது உள்நாட்டு விவகாரம் என்று கூறியதையும் மீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இது இந்தியாவிற்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இனிமேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை கிடையாது. இது உலக அளவில் பிரச்சனையாக மாறிவிட்டது. இனி நடக்க போகும் விஷயங்கள் எல்லாம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கையில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    English summary
    After 34 years, the Jammu Kashmir issue will be discussed in the UN Security Council after China's pressure.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X