நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடியவே முடியாது.. புரட்சி செய்யும் ஆர்மி ஜெனரல்.. டிரம்பை கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க ராணுவம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பென்டகன் எதிர்த்து பேசி இருந்த நிலையில் தற்போது அந்நாட்டு ராணுவம் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இதனால் அதிபருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் முற்றி இருக்கிறது.

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது மொத்தமாக அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார். அவருக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார்

எதற்கும் தயார்.. விமானப்படையை களமிறக்கிய இந்தியா.. லடாக் முழுக்க தீவிர ரோந்து.. என்ன நடக்கிறது?எதற்கும் தயார்.. விமானப்படையை களமிறக்கிய இந்தியா.. லடாக் முழுக்க தீவிர ரோந்து.. என்ன நடக்கிறது?

ராணுவ திட்டம்

ராணுவ திட்டம்

இந்த நிலையில் அமெரிக்காவில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அதிபர் டிரம்ப் அங்கு தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளார். அதோடு அங்கு ராணுவத்தை களமிறக்க முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்க அரசின் விதிப்படி அமெரிக்க மண்ணுக்குள் ராணுவத்தை களமிறக்க முடியாது. இதனால் Insurrection Act என்ற அவசர சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து அங்கு ராணுவத்தை களமிறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஆனால் இதை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஜெனரல் மார்க் மில்லிதான் அங்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் அதிபர் டிரம்பின் இந்த முடிவை தொடர்ந்து, முக்கியமான உத்தரவு ஒன்றை தனது படை வீரர்களுக்கு பிறப்பித்து இருக்கிறார். அதில் ராணுவத்தை களமிறக்கும் டிரம்பின் முடிவை ஜெனரல் மில்லி கடுமையான விமர்சனம் செய்து இருக்கிறார்.

சொல்வது என்ன

சொல்வது என்ன

அதில், நாம் சட்டத்திற்கும் அமெரிக்காவின் இறையாண்மைக்கும்தான் கட்டுப்பட வேண்டும். அமெரிக்காவில் எல்லா ஆண்களும் பெண்களும் சமம். அவர்கள் என்ன மதம், நிறம், மொழி, இனமாக இருந்தாலும் சரி. அவர்கள் எல்லோரும் சமமானவர்கள். அதை மறக்க வேண்டும். நாம் அமெரிக்க மக்களுக்கு எதிராக செயல்பட கூடாது . அமெரிக்க மக்களை பாதுகாப்பதே நமது நோக்கம்.

மறக்க கூடாது

மறக்க கூடாது

நாம் ராணுவத்தில் சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியத்தை மறக்க கூடாது. அந்த சத்தியத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு படையை அமெரிக்க மண்ணில் இறக்கி இருக்க கூடாது. அதிபருக்கு இதற்கான அதிகாரம் இல்லை. கவர்னர் மட்டுமே தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கும் பலம் கொண்டவர். அதிபர் அதை செய்ய முடியாது. அமைதியை நிலைநாட்டுவதுதான் அந்த படையின் நோக்கம்.

 ஒருங்கிணைந்த படை

ஒருங்கிணைந்த படை

அமெரிக்காவின் ஒருங்கிணைந்த ராணுவ படையின் ஜெனரலாக நான் சொல்கிறேன். எங்கள் படைகளில் அனைத்து வண்ணங்களை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். பல்வேறு இனக்குழுக்கள் இருக்கிறார்கள். நாம் அமெரிக்கா அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். நாம் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மக்களையும், தேசத்தையும் காக்கும் வகையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று, மில்லி குறிப்பிட்டு இருக்கிறார்.

அனுமதிக்கவில்லை

அனுமதிக்கவில்லை

அமெரிக்காவில் ராணுவத்தை களமிறக்க இவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் வாஷிங்டன் வரை வந்த அமெரிக்கா ராணுவப்படை திரும்பி சென்றது. அமெரிக்க அதிபர் ராணுவத்தை களமிறக்க உத்தரவிட்டும் இப்படி நடந்தது. அந்நாட்டு அதிபருக்கு எதிராக தற்போது அந்நாட்டு ராணுவம் களமிறங்கி பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ராணுவ புரட்சிக்கு வித்திடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    சீன விமானங்களுக்கு தடை விதித்த டிரம்ப்.. என்ன நடக்கிறது?
    பென்டகன் என்ன சொன்னது

    பென்டகன் என்ன சொன்னது

    இன்னொரு பக்கம் அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று கூறியுள்ளார். முதல்முறை பென்டகன் இப்படி நேரடியாக டிரம்பை எதிர்த்து உள்ளது. இப்படி அனைத்து பக்கமும் விழும் அடி டிரம்பை நிலைகுலைய வைத்துள்ளது.

    English summary
    After Pentagon, Now Army General Milley also opposing Trump for deploying army in US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X