நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போன் செய்த மோடி.. நீண்ட நேரம் பேசிய இஸ்ரேல் நெதன்யாகு.. தனித்து விடுபடும் டிரம்ப்.. பிடனின் எழுச்சி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் பலர் அதிபர் தேர்தலில் வென்றுள்ள பிடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் தோல்வியை அதிபர் டிரம்ப் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது பிடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு உலகம் முழுக்க வலதுசாரி தலைவர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான், பிரேசில் பிரதமர் ஜெய்ர் பொல்சார்னோ, இந்திய பிரதமர் மோடி என்று டிரம்பிற்கு நெருக்கமான தலைவர்கள் பலர் உள்ளனர்.

தீவிரமான இடதுசாரி தலைவர்கள் என்ற கொள்கையின் கீழ் இவர்கள் எல்லோரும் நட்பாகி உள்ளனர். அதிலும் பிரதமர் மோடி, டிரம்பிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்.

பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்

நெருக்கம்

நெருக்கம்

அதிபர் டிரம்பிற்கு டெக்சாசில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதான் என்று கூட சொல்ல முடியும். ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இருந்து தான் டிரம்பின் தேர்தல் பிரச்சாரமே தொடங்கியது. டிரம்ப் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியே.. ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

அதேபோல் டிரம்ப்தான் வெளிப்படையாக இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்தார். மற்ற அமெரிக்க அதிபர்கள் செய்ய நடுங்கிய விஷயத்தை டிரம்ப் வெளிப்படையாக செய்தார். அதேபோல் அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் செய்ய வைத்தது என்று இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டு, அவருக்கு நெருங்கிய நண்பர் ஆனார் டிரம்ப்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டிரம்ப் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். பிடன்தான் அடுத்த அதிபர் என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், பிடனுக்கு நேற்று பிரதமர் மோடியை போனில் வாழ்த்து தெரிவித்தார். இரண்டு நாட்டு உறவு நெருக்கமாக நீடிக்க வேண்டும், பிடன் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன், என்று பிரதமர் மோடி போனில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

பிரதமர் மோடியை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் இன்று பிடனுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் போனில் பேசி உள்ளனர். இரண்டு நாட்டு உறவில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசவும், விரைவில் இருவரும் சந்திக்கும் இதில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பிடனின் வெற்றியை சீனாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சீனா

சீனா

பிடனின் வெற்றியை சீனா ஏற்றுக்கொண்டு, அதற்கான வாழ்த்தை தெரிவித்துள்ளது. பொதுவாக அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறான விஷயம் இல்லை. ஆனால் பிடனின் வெற்றியை டிரம்ப் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தபால் வாக்கெடுப்பில் முறைகேடு நடந்துவிட்டது என்று இன்னும் அவர் கூறிக்கொண்டு இருக்கிறார்.

மோசம்

மோசம்

இதற்கான சட்ட போராட்டங்களையும் டிரம்ப் நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் போதுதான் பிடனுக்கு டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகளே வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிடன் வெற்றியை டிரம்ப் ஏற்காத நிலையில் அவருக்கு நெருக்கமான மோடி, நெதன்யாகு போன்ற பிற நாட்டு தலைவர்கள் இந்த வெற்றியை அங்கீகரித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் சர்வதேச அளவில் டிரம்ப் தனித்து விடப்பட்டுள்ளார்.

வழி இல்லை

வழி இல்லை

டிரம்பின் நெருக்கமான கூட்டாளிகள் அவரை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்காவிலும் டிரம்பின் புகார்களை செவி மடுத்து கேட்க ஆட்கள் இல்லை. டிரம்ப் வைக்கும் புகார்களை அவரின் சொந்த கட்சியினரே பெரிதாக மதிக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது உலக நாட்டு தலைவர்களும் பிடனின் வெற்றியை ஏற்றுக்கொண்டு உள்ளனர். இதன் காரணமாக டிரம்ப் பெரிய அளவில் அரசியல் சதித் திட்டம் எதையும் தீட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

English summary
Almost all the close allies to Trump wished US President-elect Joe Biden after the victory in election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X