நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலமணி நேரத்தில் 49 ஆயிரம் கோடி அவுட்! அமேசான் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமேசான் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார்

    நியூயார்க்: உலகின் பெரும் செல்வந்தர் என்ற பெருமையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்துள்ளார். மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் மந்த நிலையால் பங்கு சந்தையில் சில மணி நேரத்தில் 7 சதவீதம் அளவுக்கு பங்குகள் வீழ்ந்தது. இதன் காரணமாக முதல் இடத்தை இழந்தார்

    உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் அமேசான். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் ஜெப் பெசோஸ். இவரது நிறுவனம் குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி ஆன்லைன் வர்த்தகத்தை வெற்றிகரமாக செய்து வருகிறது.

    இந்தியாவிலும் அமேசான் நிறுவனம் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பை கேட்டால் தலை சுற்ற வைக்கும். அமேசான் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கடந்த ஜுன் 30ம் தேதி நிலவரப்படி அமேசானின் சொத்து மதிப்பு 191.351 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    இந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்புஇந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு

    உலகின் முதல் இடம்

    உலகின் முதல் இடம்

    இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு என்றால், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்தின் நிகர மதிப்பு 2018ம் ஆண்டு 160 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இதன் மூலம் உலகின் பெரும் செல்வந்தர் என்ற பெயருடன் 24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு ஜெப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்தார்.

    7 சதவீதம் வீழ்ச்சி

    7 சதவீதம் வீழ்ச்சி

    இந்நிலையில் இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு காலாண்டில் அமேசான் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசானின் சொத்து மதிப்பு சில மணி நேரத்தில் (வியாழக்கிழமை) 7 சதவீதம் வரை சரிந்தது.

    சரிந்த சொத்து மதிப்பு

    சரிந்த சொத்து மதிப்பு

    இப்படி சரிந்ததால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. இதன் காரணமாக ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற பெருமையை இழந்துள்ளார்.

    சொத்து மதிப்பு

    சொத்து மதிப்பு

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஜெப் பெசோஸ் வைத்துள்ள சொத்தின் இந்திய மதிப்பு சுமார் 7லட்சத்து 37 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஆகும் . பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 7லட்சத்து 49 ஆயிரத்து 801 கோடியாக உள்ளது.

    11 லட்சம் கோடி

    11 லட்சம் கோடி

    முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு கடந்த 2018ல் முதலிடத்தை பிடிக்கும் போது அவரது இந்திய சொத்தின் மதிப்பு 11 லட்சத்து 35 ஆயிரத்து 208 கோடியாக இருந்தது. ஜெப் பெசோஸ் தான் உலகிலேயே முதல் முறையாக 10 லட்சம் கோடி சொத்துக்களை சம்பாதித்த முதல் நபர் என்ற பெருமையும் அப்போது கிடைத்தது. ஆனால் இப்போது பில்கேட்ஸிடம் முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார்.

    English summary
    Amazon founder Jeff Bezos Is No Longer The World's Richest Man. Amazon shares fell 7 per cent in after-hours trading on Thursday, losing nearly $7 billion in stock value.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X