நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இனி நாங்கதான் லீடர்.. அமெரிக்கா இஸ் பேக்".. ஆரம்பத்திலேயே பொறி பறக்கும் பிடன்.. எல்லாம் மாறுகிறது!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது.. உலகை மீண்டும் அமெரிக்கா வழி நடத்தும் என்று அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தற்போது அதிரடியாக செயல்பட தொடங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனாலும் பிடன் பதவி ஏற்பதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அதிபர் பதவியை கை மாற்றுவதற்கான டிரான்சிஸன் பணிகளை மேற்கொள்ள டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

திடீர் அமைதி.. சத்தமே இல்லை.. திடீர் அமைதி.. சத்தமே இல்லை.. "இதுதான் ஒருவேளை அதுவோ".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்!

உறுதி

உறுதி

இதனால் வரும் 2021 ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்க உள்ளார். இவர் அதிபராக பதவி ஏற்க உள்ள நிலையில் இப்போதே அமைச்சர்களை, உயர் அதிகாரிகளை அறிவிக்க தொடங்கி விட்டார். நேற்று பிடன் இதற்காக 6 அதிகாரிகளை, அமைச்சர்களை அறிமுகம் செய்தார்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்கன் தேர்வாகி உள்ளார். அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக அலிஜான்ரோ மாயோர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனர் பொறுப்பிற்கு ஆவ்ரில் ஹைனசை பிடன் நியமித்து உள்ளார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் பெண் இவர்தான்.

 லிண்டா தாமஸ்

லிண்டா தாமஸ்

லிண்டா தாமஸ் தற்போது ஐநாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேக் சுல்லிவான் தற்போது உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை நேற்று அறிமுகம் செய்த பிடன் மிக முக்கியமான உரையை நிகழ்த்தினார். அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் பிடன் பேச்சு அமைந்து இருந்தது.

பிடன் உரை

பிடன் உரை

பிடன் தனது உரையில், அமெரிக்கா இஸ் பேக். நாங்கள் மீண்டு வந்துவிட்டோம். உலகை மீண்டும் நாங்கள் முன்னின்று நடத்த, நிர்வகிக்க போகிறோம். எனக்கு பின் நிற்கும் இந்த அதிகாரிகள்தான் அமெரிக்காவை வழி நடத்த போகிறார்கள். இவர்கள்தான் அமெரிக்காவை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்கள்.

லீடர்

லீடர்

அமெரிக்காவின் தலைமை குணம் மீண்டும் வெளிப்படும். அமெரிக்கா மீண்டும் உலகத்தலைமை கொள்ளும். மீண்டும் முதல் நாடு என்ற பெருமை நமக்கு கிடைக்கும். நட்பு நாடுகளுக்கு நாம் தொடர்ந்து உதவுவோம். அமெரிக்காவின் வலிமை எல்லோருக்கும் மீண்டும் தெரியும்.

 வெளியேற்றம்

வெளியேற்றம்

உலகில் இருந்து அமெரிக்கா தனித்து விடப்பட்டு இருந்தது. இனியும் அந்த நிலை நீடிக்காது, என்று பிடன் கூறியுள்ளார். பிடன் இப்போது நியமித்து இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் பழுத்த அரசியல் நுட்பம் தெரிந்தவர்கள். பலர் ஒபாமா அமைச்சரவையில் பாடம் கற்றவர்கள். இவர்களுக்கு பிடன் முன்னுரிமை வழங்கி உள்ளார்.

முன்னுரிமை

முன்னுரிமை

டிரம்ப் காலத்தில் சர்வதேச அளவில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. இரண்டு நாடுகளுக்கான ஆளுமையை இழந்தது. அதை மீட்டு எடுக்க போகிறேன் என்று தொடக்கத்திலேயே பிடன் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றபடி அதிகாரிகளை நியமித்துள்ளார். பிடன் வருகைக்கு பின் மீண்டும் அமெரிக்கா தனது பிக்பாஸ் மனநிலைக்கு செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
America is Back says US President elect Biden after selects his close aides for the Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X