நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலம்பெயர்ந்தவனாக சொல்கிறேன்.. சிஏஏ குறித்து மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா அதிரடி கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Satya Nadella shares his view on CAA

    நியூயார்க்: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா, வங்க தேசத்தில் இருந்து குடியேறிய அகதி ஒருவர், இந்தியாவின் அடுத்த யூனிகார்னை உருவாக்க உதவுவதற்கோ அல்லது இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக வருவதற்கோ விரும்புவதாகக் கூறியதாக தெரிவித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடெல்லாவை மேற்கோள் காட்டி, ஆன்லைன் வலைத்தளமான BuzzfeedNews இன் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் டுவிட்டர் பதிவு ஒன்றை திங்கள் அன்று வெளியிட்டார்.

    அந்த பதிவினை சத்ய நாடெல்லாவின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பார்வை இது தான் என்று கூறி ஸ்மித் வெளியிட்டுள்ளார்.

    திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்

     இது மோசமானது

    இது மோசமானது

    "இங்கே நடப்பது வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாக நான் நினைக்கிறேன் ... இது மோசமானது .... வங்கதேசத்தில் இருந்து அகதியாக குடியேறிய இந்தியர் ஒருவரை பார்த்தேன். அவர் இந்தியாவில் அடுத்த யுனிகார்னை உருவாக்க விரும்புவதாகவும் அல்லது இன்போசிஸின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வர விரும்புவதாகவும் கூறினார்" என நாடெல்லா தெரிவித்ததாக ஸ்மித்து குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை காலை மன்ஹாட்டனில் நடந்த மைக்ரோசாஃப்ட் நிகழ்வில் பேசும் போது நாடெல்லா இந்த கருத்தை வெளிப்படுத்தியாக ஸ்மித் கூறினார்.

    நாடெல்லாவுக்கு பாராட்டு

    இந்த பதிவு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, பெங்களூரில் CAA க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது டுவிட்டரில, நதெல்லாவின் நிலைப்பாட்டைப் பாராட்டினார். "சத்ய நாடெல்லா தான் நினைப்பதை கூறியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இதை முதலில் சொல்ல எங்கள் சொந்த ஐடி ஜார்ஸில் ஒருவருக்கு தைரியமும் ஞானமும் இருந்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என்றார்.

    இந்தியாவுக்கான நம்பிக்கை

    நான் எனது இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன், ஒரு பன்முக கலாச்சார இந்தியாவில் வளர்ந்தேன். அமெரிக்காவில் எனது புலம்பெயர்ந்த அனுபவமும் உள்ளது. ஒரு புலம்பெயர்ந்தவர் ஒரு வளமான தொடக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பலாம் அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பயனளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த முடியும். இதுவே இந்தியாவுக்கான எனது நம்பிக்கை" என்று தெரிவித்துள்ளார்.

    பாசிச நடவடிக்கை

    முன்னதாக கூகுள், பேஸ்புக், உபெர் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணிபுரியம் 150 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐடி பணியாளர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும்,, நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் திறந்த கடிதம் எழுதி இருந்தனர். மத்திய அரசின் இந்த இரண்டு முயற்சிகளையும் "பாசிச" நடவடிக்கை என்று விமர்சித்து இருந்தனர்.

    English summary
    Amid Debate on CAA, Microsoft CEO Satya Nadella Shares His View
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X