நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூச்சு விட முடியவில்லை.. துடிதுடித்து பலியான கறுப்பின இளைஞர்.. அமெரிக்காவில் போலீஸின் கொடூர செயல்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கருப்பின இளைஞர் ஒருவர் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தை உலுக்கி உள்ளது.

Recommended Video

    அமெரிக்காவில் தொடரும் போராட்டம்... தயார் நிலையில் ராணுவம்

    அமெரிக்காவில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கருப்பின மக்கள் என்று அழைக்கப்படும் ஆப்ரோ அமெரிக்க மக்கள் பல கோடி பேர் வசிக்கிறார்கள். எப்போதும் போலீசார் எந்த குற்றம் நடந்தாலும் இந்த ஆப்ரோ அமெரிக்க மக்களை கைது செய்வதும், குற்றஞ்சாட்டுவதும் வழக்கம்.

    சென்னையில் வடசென்னை மக்களை குறி வைப்பது போலவே அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்க மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இப்படி ஆப்ரோ அமெரிக்க மக்கள் பலர் போலீசால் என்கவுண்டர் செய்யப்படுவதும் வழக்கம்.

    டெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!டெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு!

    விசாரணை மரணம்

    விசாரணை மரணம்

    இந்த நிலையில் கடந்த 27ம் தேதி அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கருப்பின இளைஞர் ஒருவர் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தை உலுக்கி உள்ளது. அதன்படி அமெரிக்காவின் மின்னேபோலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவர்தான் குற்றம் செய்த நபர் என்று உறுதியாக போலீசுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி போலீசார் இவரை கைது செய்து இருக்கிறார்கள். இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள். விடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார்.

    துடித்து போனார்

    துடித்து போனார்

    போலீசார் இப்படி ஜார்ஜ் கழுத்தில் காலை வைத்து அழுத்தும் போது, அவர் துடித்து போய் இருக்கிறார். என்னால் மூச்சு விட முடியவில்லை. என்னை கொலை செய்யாதீர்கள். என்னை சுவாசிக்க முடியவில்லை, என்று ஜார்ஜ் மீண்டும் மீண்டும் கூறி உள்ளார். ஆனால் போலீஸ் இது தெரிந்தும் வேண்டும் என்றே அவரை கழுத்தை நெரித்துள்ளது. அருகில் இருந்த மக்கள் கூறிய பின்பும் போலீசார் அங்கிருந்து விலகி செல்லவில்லை.

    பலியானார்

    பலியானார்

    அங்கு பல கறுப்பின மக்கள் போலீசுக்கு எதிராக குரல் கொடுத்தும் போலீஸ் மக்கள் பேச்சை கேட்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து கழுத்தை நெரித்த காரணத்தால் அந்த கருப்பின இளைஞர் அந்த இடத்திலேயே மூச்சு விட முடியாமல் மயக்கம் அடைந்தார். பின் அந்த இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த அந்நிலையில் தற்போது இந்த செயலில் ஈடுப்பட்ட போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியானதால் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த போலீசார் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது .

    English summary
    An Afro - American man dies after police assaulted him while investigating in the road in USA- Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X