நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க!

விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க!-வீடியோ

    நியூயார்க்: விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

    அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம்.

    பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

    நாசா வீரர்

    இந்த நிலையில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஏஜே (ட்ரூ). பியூஸ்டல் இதேபோல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் சென்று ஆராய்ச்சி செய்து இருக்கிறார். கடந்த மே மாதம் சென்ற அவர் சர்வதேச விண்வெளி மையத்தில் நிறைய ஆராய்ச்சிகளை செய்தார். அங்கு நடந்த ஆராய்ச்சிகளை இவர் உடனுக்குடன் டிவிட் செய்தும் வந்தார்.

    பூமிக்கு திரும்பினார்

    பூமிக்கு திரும்பினார்

    இந்த நிலையில் அவர் மொத்தம் 197 நாட்கள் விண்வெளியில் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் இவர் பூமிக்கு திரும்பினார். இவர் பூமிக்கு திரும்பியவுடன் நடப்பதற்கே பெரிய அளவில் கஷ்டப்பட்டதாக தெரிவித்து உள்ளார். புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் மிதந்துவிட்டு பூமியில் நடக்கவே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    வைரல் வீடியோ

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார். நாசா விஞ்ஞானிகள் முன்னிலையில் அவர் கண்ணை மூடிக்கொண்டு நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தை முதன்முதலாக நடக்கும் போது எப்படி கஷ்டப்படுமோ அப்படி கஷ்டப்பட்டு, திணறி திணறி நடந்து உள்ளார். இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

    இயல்பு

    இயல்பு

    அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த வீரர்களுக்கு பூமியில் நடப்பது கஷ்டமாகத்தான் இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் அதேபோல் உடல் ரீதியாகவும் சில பிரச்சனைகள் வரும் என்றுள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனைகள் சரியாகிவிடும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

    English summary
    A NASA astronaut releases a video walking on earth after 197 days worked in Internation Space Station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X