நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காரில் தூங்கியவரை சரமாரியாக சுட்ட போலீஸ்.. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலை.. பகீர் காட்சிகள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை கைது செய்ய சென்ற போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளி கழுத்தை நெரித்தனர். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தற்போதும் கூட ஜார்ஜ் பிளாய்ட் மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்கா முழுக்க இதனால் மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் மீன்வரத்து- ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இடைவெளியின்றி குவிந்த மக்கள்நீண்ட இடைவெளிக்கு பின் மீன்வரத்து- ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் இடைவெளியின்றி குவிந்த மக்கள்

கைது செய்ய சென்றனர்

கைது செய்ய சென்றனர்

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் அங்குநடந்துள்ளது . அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை கைது செய்ய சென்ற போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் வெண்டிஸ் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. போலீசின் துப்பாக்கி சூட்டில் பலியான நபர் 27 வயது ரேய்ஷார்ட் ப்ரூக்ஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தூங்கினார்

தூங்கினார்

அங்கு இருக்கும் சாலை ஒன்றில் இவர் தனது காரை நிறுத்திவிட்டு தூங்கி இருக்கிறார்.இதனால் பின்னால் வந்த கார்கள் சில செல்ல முடியாமல் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ப்ரூக்சை கைது செய்ய முயன்றனர். ப்ரூக்ஸ் மதுபானம் குடித்து இருந்ததும் போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வேகமாக ஓடினார்

வேகமாக ஓடினார்

இந்த நிலையில் ப்ரூக்ஸை கைது செய்யும் போது போலீசுக்கும் அவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர் மீது எலக்ட்ரிக் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி இருக்கிறார்கள். உடலில் பட்டதும் ஷாக் அடிக்க வைக்கும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதில் இருந்து தப்பித்து ப்ரூக்ஸ் அங்கிருந்து சில மீட்டர்கள் வேகமாக ஓடி இருக்கிறார்.

வீடியோ வந்தது

வீடியோ வந்தது

100 மீட்டருக்கு குறைவாகவே அவர் ஓடி இருக்கிறார். இந்த நிலையில் அவரை வேகமாக பின் தொடர்ந்த போலீசார், அங்கேயே சரமாரியாக சுட்டு இருக்கிறார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த இளைஞரை போலீசார் மோசமாக தாக்குவதும், அதன்பின் அவரை ஓட ஓட விட்டு சுடுவதும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

போராட்டங்கள் வெடித்தது

போராட்டங்கள் வெடித்தது

இந்த சம்பவம் காரணமாக அட்லாண்டா பகுதியில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது. வெண்டிஸ் ஹோட்டல் ஒன்று தீ வைக்கப்பட்டு உள்ளது. அந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் வெடித்து நடந்து வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய இரண்டு போலீசாரும் வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று தீவிரமாக அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது.

English summary
Another Afro American man shot dead by police after George Floyd death in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X