நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவுக்கு செக்... ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது... அதிபர் டிரம்ப் ட்வீட்

Google Oneindia Tamil News

நியூயார்க்: மேக் புரோ கணினிக்காக, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிச்சலுகை இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.

Apple will not be given Tariff waiver, or relief: Trump Tweet:

அந்தவகையில், ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் உள்ள இடமாகவும், முக்கிய சந்தைகளில் ஒன்றாகவும் சீனா திகழ்கிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சீனாவில் உற்பத்தியாகி அமெரிக்கா கொண்டுவந்து இறக்குமதி செய்யப்படும் மேக் புரோ பாகங்களுக்கு வரி விலக்கோ, வரிச் சலுகையோ அளிக்கப்படாது என கூறியுள்ளார். அதை அமெரிக்காவிலேயே உருவாக்கினால் இறக்குமதி வரி இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுக்கு போக மாட்டேன்.. உயிருக்கு ஆபத்து.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த திமுக பிரமுகரின் மகள்! வீட்டுக்கு போக மாட்டேன்.. உயிருக்கு ஆபத்து.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த திமுக பிரமுகரின் மகள்!

டெக்சாசிலேயே உற்பத்தி ஆலையை ஆப்பிள் நிறுவனம் அமைத்தால் தாம் மகிழ்வேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். பிற தயாரிப்புப் பொருட்களைப் போன்றே பல்வேறு நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் வாங்கினாலும், அமெரிக்காவில் தான் வடிவமைப்பு மற்றும் பொறியியல் பணிகளை மேற்கொள்வதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

பிற நாடுகளைப் போன்றே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதிரிபாகங்களை பயன்படுத்துவதாகவும், இறுதி ஒருங்கிணைப்பு ஒரு சிறு பணி தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே இதே போன்ற காரணத்தால் ஜெனரல் மோட்டார்ஸ் , டெஸ்லா, உபெர் போன்ற நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் வரிவிலக்களிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Trump Tweet: Apple will not be given Tariff waiver, or relief, for Mac Pro parts that are made in China. Make them in the USA, no Tariffs!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X