நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏமனுக்குள் நடுஇரவில் புகுந்து தாக்கிய அமெரிக்கா.. அல் கொய்தாவின் 2 தலைவர்கள் கொலை.. டிரம்ப் அதிரடி!

ஏமன் நாட்டில் இன்று அதிகாலை அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அல் கொய்தா அமைப்பின் அரேபியன் தீபகற்ப தலைவர் மற்றும் துணை தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஏமன் நாட்டில் இன்று அதிகாலை அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அல் கொய்தா அமைப்பின் அரேபியன் தீபகற்ப தலைவர் மற்றும் துணை தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாட்டில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த சில வாரங்கள் முன் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளில் அமெரிக்காவின் கை மீண்டும் ஓங்கி உள்ளது. முக்கியமாக ஏமன் போரில் அமெரிக்காவின் கை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.

வேகமெடுத்த கொரோனா.. சீனாவில் ஒரே நாளில் 73 பேர் பலி.. 636ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. பீதியில் மக்கள்!வேகமெடுத்த கொரோனா.. சீனாவில் ஒரே நாளில் 73 பேர் பலி.. 636ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. பீதியில் மக்கள்!

தொல்லையாக இருந்தார்

தொல்லையாக இருந்தார்

ஆனால் அமெரிக்காவிற்கு ஏமன் நாட்டில் மிகப்பெரிய தலைவராக இருந்தவர்தான் குவாஸிம் அல் ரிமி. இவர் தில் அல் கொய்தா அமைப்பின் அரேபியன் தீபகற்ப தலைவர். அமெரிக்கவிற்கு ஒசாமா பின் லேடனுக்கு பிறகு பெரிய அளவில் எதிரியாக இவர் திகழ்ந்து வந்தார். ஏமன் நாட்டில் இவர் 8 முறைக்கும் அதிகமாக தீவிரவாத தாக்குதல்களை நிகழத்தி இருக்கிறார்கள். அமெரிக்காவை தாக்க பலமுறை திட்டமிட்டுள்ளார்.

அடிக்கடி தப்பித்தார்

அடிக்கடி தப்பித்தார்

ரிமியை பிடிக்க பலமுறை அமெரிக்க ராணுவம் முயன்றது. 2018ல் ரிமி என்று கருதப்பட்டு தவறாக வேறு ஒரு தீவிரவாதி மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதேபோல் 2019ல் ரிமியை தேடி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது. இந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பலியானதுதான் மிச்சம். அதன்பின் கடந்த 6 மாதமாக அமெரிக்க ராணுவம் ரிமியை தொடர்ந்து தேடி வந்தது.

இன்று கொலை

இன்று கொலை

இந்த நிலையில் ஏமன் நாட்டில் இன்று அதிகாலை அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அல் கொய்தா அமைப்பின் அரேபியன் தீபகற்ப தலைவர் ரிமி கொலை செய்யப்பட்டார். அதேபோல் துணை தலைவர் அயமான் அல் சவஹாரி கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாட்டில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அதிபர் டிரம்பின் நேரடி உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ஏமன் போர் மாறும்

ஏமன் போர் மாறும்

இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் வள நாடுகளில் அமெரிக்காவின் கை மீண்டும் ஓங்கி உள்ளது. முக்கியமாக ஏமன் போரில் அமெரிக்காவின் கை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது. ஏமன் போரை மொத்தமாக இதனால் அமெரிக்கா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏமன் போரில் அமெரிக்க படைகள் மீது பலமுறை ரிமி தாக்குதல் நடத்தினார் . தற்போது அது மொத்தமாக முடக்கப்பட்டு உள்ளது.

English summary
Arabian Peninsula's Chief of Al Qaeda killed in an airstrike today by the USA forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X