நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விண்வெளி ஆராய்ச்சியின் கிங்.. உடைந்து நொறுங்கிய The Arecibo தொலைநோக்கி.. 3 நிமிடத்தில் சின்னாபின்னம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றான "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி உடைந்து விழுந்துள்ளது. வெறும் 3 நிமிடத்தில் இந்த ராட்சச தொலைநோக்கி உடைந்து நொறுங்கி உள்ளது.

உலகம் முழுக்க விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்கும், கிரகங்கள், நட்சித்திரங்களை ஆராய்ச்சி செய்யவும் நிறைய தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்ந்த காடுகள், கடல் பகுதிகள், துருவ பகுதிகளில் கூட ராட்சச தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இத்தனை நாட்கள் இப்படி ஆராய்ச்சி செய்து வந்த தொலைநோக்கிகளில் ஒன்றுதான் "தி அரிசிபோ அப்சர்வேட்டரி (The Arecibo Observatory)''. அமெரிக்காவின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் ப்யூர்ட்டோரிக்கோ தீவில் இந்த தொலைநோக்கி உள்ளது.

பிரபலம்

பிரபலம்

உலகம் முழுக்க இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' மிகவும் பிரபலம் ஆகும். 1963ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த தொலைநோக்கி கிட்டத்தட்ட 2016 வரை உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக இருந்தது. 2016ல் சீனா ''பாஸ்ட்' என்ற தொலைநோக்கியை உருவாக்கிய பின் "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' உலகின் பெரிய தொலைநோக்கி என்ற பெருமையை இழந்தது.

எப்படி

எப்படி

1963ல் இருந்து நினைத்து பார்க்க முடியாத பல கண்டுபிடிப்புகளை இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் பவுண்டேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த தொலைநோக்கி காந்தபுலன்கள், காந்த வீச்சு கதிர்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இதில் நிறைய அப்டேட்கள் செய்யப்பட்டு வேறு பல சோதனைகள் நடந்தது.

சோதனை

சோதனை

காஸ்மோஸ் கதிர்களை ஆராய்ச்சி செய்வது , பூமி வெளியிடும் காந்த் கதிர்களை ஆராய்ச்சி செய்வது, பிற கிரகங்கள் வெளியிடும் காந்த கதிர்வீச்சுகளை ஆராய்ச்சி செய்வது என்று இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி செய்யாத சாதனையே இல்லை. பிற கிரகங்கள் வெளியிடும் ஈர்ப்பு விசையையும் இது கணக்கிடும். இதன் மூலம் பிற கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்ய முடியும்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

அதேபோல் இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கிதான் முதல் பைனரி பல்சர் நட்சத்திரத்தை 1974ல் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரம் சுழன்று கொண்டு அதிக அளவு காந்தபுலத்தை கொண்டு இருந்தால் அதை பல்சர் நட்சத்திரம் என்று அழைப்பார்கள். அருகருகே இரண்டு பல்சர் நட்சத்திரம் ஜோடியாக செயல்பட்டால் அதை பைனரி பல்சர் என்று கூறுவார்கள். இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி''தான் முதல் முறையாக பைனரி பல்சர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தது.

தத்துவம் மீறியது

தத்துவம் மீறியது

இதன் மூலம் உலகின் இயற்பியல் தத்துவங்களே மாறியது. முக்கியமாக ஐன்ஸ்டினின் பொது சார்பியல் தத்துவம் உருவாகவே "தி அரிசிபோ அப்சர்வேட்டரி' 'தொலைநோக்கியின் இந்த கண்டுபிடிப்புதான் காரணமாக இருந்தது. 1993ல் இந்த கண்டுபிடிப்பை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு கூட கிடைத்தது. அதேபோல் மனிதர்களின் சாதனையை இமேஜ் சிக்னலாக மாற்றி இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி வான்வெளிக்கு அனுப்பி உள்ளது.

விண்வெளி ஏலியன் ஆராய்ச்சி

விண்வெளி ஏலியன் ஆராய்ச்சி

பூமியை ஏதாவது வெளியுலக வாசிகள் தேடினால் அவர்கள் கண்டுபிடிக்க வசதியாக இந்த சிக்னலை "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' விண்ணுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்தது. இது மட்டுமின்றி வேற்றுகிரக வாசிகள் குறித்தும் பல ஆராய்ச்சிகளை இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி செய்துள்ளது. சில ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும், காண்டாக்ட் போன்ற ஏலியன் படங்களிலும் இந்த நிலையில் தற்போது இந்த இமாலய தொலைநோக்கி உடைந்து விழுந்துள்ளது.

உடைந்தது

உடைந்தது

இந்த தொலைநோக்கி குழி போன்ற வடிவமைப்பு கொண்டது ஆகும். மையத்தில் குழி போல அமைந்திருக்கும் பகுதிக்கு மேலே 500 அடி உயரத்தில் தொலைநோக்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். மூன்று பக்கம் தூண்கள் போன்ற பகுதிகள் வைக்கப்பட்டு இருக்கும். மையத்தில் உள்ள தொலைநோக்கியை கேபிள் மூலம் அங்கு இருக்கும் தூண்கள் தாங்கிக்கொண்டு உள்ளது. இதன் மூலம் ஊஞ்சல் போல கேபிள்கள் உதவியுடன் இந்த தூண்கள் தொங்கிக் கொண்டு இருக்கும்.

டிரான்ஸ்மீட்டர்

டிரான்ஸ்மீட்டர்

இதன் கீழே சில இடங்களில் டிரான்ஸ்மீட்டர்கள் இருக்கும். 900 டன் எடை கொண்ட இந்த தொலைநோக்கியை மூன்று தூண்களில் இருந்த கேபிள்கள்தான் இத்தனை வருடம் காத்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த தொலைநோக்கியின் மையம் அப்படியே உடைந்து கீழே விழுந்துள்ளது. ஓரத்தில் இருக்கும் தூண்கள் உடைந்ததாலும், கேபிள் அறுந்த காரணத்தாலும் இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' கீழே விழுந்துள்ளது.

சேதுராமன்

சேதுராமன்

இந்த தொலைநோக்கியை கட்டுப்படுத்தி வந்தது தேசிய அறிவியல் பவுண்டேஷன் ஆகும். அமெரிக்காவில் செயல்படும் இந்த அரசு அமைப்பின் இயக்குனராக தமிழரான சேதுராமன் பஞ்சநாதன் செயல்பட்டு வருகிறார். இந்த "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' குறித்து பேட்டி அளித்த சேதுராமன், "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' கீழே விழுந்ததால் விபத்து எதுவும் ஏற்படவில்லை.

நிறுத்துவிட்டோம்

நிறுத்துவிட்டோம்

இதன் செயல்பாட்டை ஒரு மாதம் முன்பே நாங்கள் நிறுத்திவிட்டோம். இதை உடனே சரி செய்ய வேண்டும். தொலைநோக்கியின் பிற பகுதிகளை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் ஒரு கேபிள் அறுந்தது, அதன்பின் நவம்பர் மாதம் தூணில் பாதிப்பு ஏற்பட்டது.

 உடைந்தது

உடைந்தது

இதன் ஒரு கேபிள் அறுந்து பேனல்கள் உடைந்த காரணத்தால் இதன் செயல்பாடு கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மொத்தமாக இந்த தொலைநோக்கி நொறுங்கி கீழே விழுந்துள்ளது. "தி அரிசிபோ அப்சர்வேட்டரி'' தொலைநோக்கி இப்படி உடைந்து விழுந்தது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரிய அளவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

English summary
The Famous Arecibo Observatory in Puerto Rico collapses into pieces after the cable came off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X